வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ICU-வில் திருட்டுத்தனமாக நுழைந்த மீனா.. சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்த சகுனிகள்

Siragadikka Aasai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் இப்போதைக்கு பார்க்க கூடிய அளவுக்கு இருக்கும் நாடகம் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் துவங்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் நடிகர் நடிகைகள் மிக எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டுவதால் வெகு சீக்கிரமே சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக மாறிவிட்டது.

அதிலும் இப்போது மீனா மறுபடியும் முத்துவின் பேச்சை மீறி இருக்கிறார். முத்துவின் தம்பி ரவியின் காதல் திருமணத்திற்கு மீனாதான் முழு காரணம் என்று அவர் மீது குடும்பமே கோபமாக இருக்கிறது. அதிலும் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் முத்து மீனாவின் மூஞ்சியை கூட பார்க்க பிடிக்கல என வீட்டை விட்டு துரத்திவிட்டார். இப்போது அம்மா வீட்டில் இருக்கும் மீனா மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்றார்.

மீனாவை பார்த்தால் முத்து தாண்டவம் ஆடுவார் என்பதால் அவருக்குத் தெரியாமல் ICU-வில் இருக்கும் மாமனாரை திருட்டுத்தனமாக சென்று பார்க்கிறார். அப்போது சாமியார் மந்திரித்து கொடுத்த கயிறை அவர் கையில் கட்டி விட்டு மாமனார் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறார்.

Also Read: ஸ்மோக்கிங் ரூமில் ஒரே லிப் லாக் சத்தமா இருக்கு ஆண்டவரே.. என்னடா இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா?

மறுபுறம் கோவிலுக்கு சென்றிருக்கும் சகுனிகளான மீனாவின் மாமியார் மற்றும் ரோகிணி இருவரும் மருத்துவமனைக்குள் நுழைகின்றனர். இவர்கள் மட்டும் மீனாவை பார்த்து விட்டால் அவ்வளவுதான், வாய்க்கு வந்தபடி அவரை திட்டி தீர்த்து விடுவார்கள்.

ஆனால் மாமனாரின் ஃப்ரெண்ட் மீனாவிற்கு உதவி புரிந்து அவர்கள் வருவதை சொல்லிவிடுகிறார். உடனே மீனாவும் ICU-வில் இருந்து வெளியேறுகிறார். ஆனால் மீனா திருட்டுத்தனமாக மாமனார் கையில் கட்டி இருந்த சாமி கயிற்றைப் பார்த்ததும் ரோகிணி அதை கண்டுபிடித்து விடுவார்.

வழக்கம்போல் சகுனி வேலை  பார்க்கும் ரோகிணி இந்த விஷயத்தை முத்துவிடம் தெரியப்படுத்துகிறார். உடனே அங்கிருக்கும் மீனாவை கண்டுபிடித்த முத்து, சரமாரியாக அவரை திட்டி மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றுகிறார். தேவை இல்லாமல் மீனா சனியனை தூக்கி பனியன்ல போட்டுக்கிட்ட மாதிரி மாமனாரை தெரியாமல் சென்று பார்த்து வாங்கி கட்டிக் கொண்டார்.

Also Read: கண்ணகி போல் நியாயம் கேட்டு வந்த சக்காளத்தி.. பாக்கியலட்சுமி வீட்டையே புரட்டி போடும் சம்பவம்

Trending News