விஜயாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிய மீனா, வேலைக்காரியாக மாறும் ரோகினி.. கிரிஷ் பற்றி முத்துக்கு வந்த அடுத்த சந்தேகம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதாவிற்கும் டிராபிக் போலீஸ் அருணுக்கும் காதல் மலர்ந்து விட்டது. இதனால் முத்துவுக்கும் அருணுக்கும் ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து ஏற்படப் போகிறது. இதற்கிடையில் மீனா, வீட்டு பிரச்சனையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பார் என்று நினைத்த முத்து கடையிலிருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்து மீனாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே சாப்பாடு கொடுக்கிறார்.

அதாவது மீனாவை பொருத்தவரை அந்த குடும்பத்தில் வேலைக்காரி மட்டுமில்லாமல் தியாகி ஆகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த வகையில் ரோகிணி வீட்டில் இல்லை, விஜயாவும் கோபித்துக் கொண்டு பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார் என்பதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். எப்படி கலகலப்பாக இருந்த வீடு தற்போது யாருமே இல்லாமல் இப்படி இருப்பது நன்றாகவே இல்லை.

எல்லாம் நம்மளால்தான், நம்மளுக்கு விஷயம் தெரிந்தால் கூட வீட்டிற்கு அந்த மணியை கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. அப்படி நாம் செய்யாமல் இருந்தால் இப்பொழுது இந்த வீடு இப்படி பிரிந்து போய் இருக்காது என்று ரொம்பவே பீல் பண்ணி பேசுகிறார். அப்பொழுது முத்து நாம் சொல்லவில்லை என்றால் இன்னும் அந்தப் பார்லர் அம்மா, பொய் மேல பொய் சொல்லிக்கொண்டு எல்லாத்தையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்.

நாம் சொல்லியதில் எந்த தப்பும் இல்லை, இருந்தாலும் எனக்கு அந்த பார்லர் அம்மா மீது இன்னும் அதிகமாக சந்தேகம் இருக்கிறது. இப்பொழுது வீட்டில் யாரும் இல்லை நீ கதவை சாத்திட்டு வா, நம் ரோகினி ரூமில் போய் செக் பண்ணலாம் என்று மீனாவை கூட்டிட்டு ரூமுக்குள் இரண்டு பேரும் செக் பண்ணி பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது மீனாவின் கையில் ஒரு குழந்தையின் டிரஸ் கிடைக்கிறது.

இது க்ரிஷுக்கு ஏற்ற மாதிரி தான் அளவு இருக்கிறது. ஆனால் இது எப்படி ரோகிணி அறைக்குள் இருக்கிறது என்பதால் முத்துவுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. உடனே மீனா, உங்க அண்ணன் மனோஜ் தான் வாங்கி வைத்திருப்பார் என்று சொல்லி குழப்பி விடுகிறார். அந்த நேரத்தில் மனோஜ் வந்துவிடுவதால் எல்லோரும் போய்விடுகிறார்கள். அடுத்ததாக ரவியும் சுருதிக்கும் பாட்டி வந்து பஞ்சாயத்து பண்ணப்போகிறார்கள் என்று தெரிந்ததால் அதை பார்ப்பதற்காக ரெசார்டில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்.

இதனை அடுத்து மீனா, முத்துவிடம் உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை பொய் சொல்லி எவ்வளவு தப்புகள் பண்ணி ஊதாரித்தனமாக இருந்தார். ஆனால் ரோகிணியை கல்யாணம் பண்ண பிறகு தான் பிசினஸ் பண்ணி அதில் ஒரு வெற்றியை பார்த்துக் கொண்டு வருகிறார். ரோகிணி இல்லை என்றால் உங்க அண்ணன் இன்னும் அப்படி தான் திருந்தாமல் இருந்திருப்பார் என்று சொல்கிறார். இதை கேட்ட மனோஜ் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

பிறகு முத்து மற்றும் மீனாவிடம் நான் இல்லாத பொழுது என் விஷயத்தை பற்றி யாரும் பேசி தலையிட வேண்டாம் என்று சொல்லிட்டு போய் விடுகிறார். அடுத்ததாக ரோகினி, சுருதிக்கு போன் பண்ணி என்ன நடக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என சுருதிக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது சுருதி, ரோகிணி ஏமாற்றியது நக்கல் அடித்து சொல்லும் விதமாக பேசிவிட்டு பாட்டி பஞ்சாயத்து பண்ண வருகிறார். அத்தையும் வந்து விடுவார் நீங்களும் வீட்டுக்கு வந்து விடுங்க என்று சொல்கிறார்.

அதன்படி ரோகிணி வீட்டுக்கு வந்த நிலையில் விஜயா கோபத்தை காட்டும் விதமாக ரோகிணியை கன்னத்தில் அடித்து விட்டு சத்தியம் கேட்கிறார். ரோகிணிக்கு சத்தியம் பண்ணுவதெல்லாம் சக்கரை பொங்கல் சாப்பிடுவது மாதிரி, அதனால் பொய் சத்தியம் ஈசியாக பண்ணி விடுவார். இருந்தாலும் இதுவரை அந்த வீட்டில் கெத்தாக இருந்த ரோகினி இனி மீனாவை விட மோசமான நிலைமையில் தான் வேலைக்காரியாக விஜயா ஆட்டிப்படைக்க போகிறார். இந்த ஒரு காட்சி தான் கோடை விடுமுறையில் குளுகுளுவென்று மக்களுக்கு இருக்கப்போகிறது.

Leave a Comment