வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மாமியாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்க போகும் மீனா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் வாயை அடைத்த புருஷன்

Siragadikka Asai: விஜய் டிவியில் எப்பொழுதும் முதலிடத்தில் அதிக கவனத்தை ஈர்த்த பாக்கியலட்சுமி நாடகத்தை பின்னுக்கு தள்ளி தற்போது அனைவரும் பார்த்து வரும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை. இந்த நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதில் நடிப்பவர்கள் அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை விஜய் சேதுபதியாக அனைவரும் முத்துவை பார்த்து வருகிறார்கள்.

இவருடைய நடிப்பும் கேரக்டரும் அனைவரையும் ஈர்த்துவிட்டது. அந்த வகையில் வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடாக சுற்றினாலும் ரொம்ப நல்லவராக இருந்து வருகிறார். ஆனால் மனைவியிடம் மட்டும் அவ்வப்போது சண்டையிட்டு முட்டிக் கொள்கிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மீனாவை எப்பொழுதும் வார்த்தையால் குத்தி கிழித்து தொங்க விடுகிறார் மாமியார்.

Also read: விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

ஆனாலும் தன் வசதி இயலாமை காரணமாக மீனா ரொம்பவே அமைதியாக பொறுத்து போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அண்ணியின் நிலைமையை மாற்றியாக வேண்டும் என்று முத்துவின் கடைசி தம்பி பல ஏற்பாடுகளை செய்து இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு முயற்சிக்கிறார். அந்த விஷயம் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. அதாவது மீனாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டு ஆறுதலாக முத்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இல்லற வாழ்க்கையில் புகுந்து விட்டார்கள். இதனால் வெட்கப்பட்டுக் கொண்டே மீனா குடும்பத்திற்குள் சுற்றிக்கொண்டு வருகிறார். இதை கவனித்த மாமியார் வழக்கம்போல் மீனாவிடம் வம்பு இழுக்கிறார். ஆனால் தற்போது மீனா அமைதியாக இல்லாமல் மாமியாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு பதிலடி கொடுக்கிறார்.

Also read: விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

அத்துடன் இவளுடைய மாற்றத்திற்கு அந்த ஒரு விஷயம் தான் காரணமாக இருக்குமோ, இவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து இருப்பார்களா என்று குழப்பத்திலே மாமியார் புலம்பித் தவிக்கிறார். அதற்கேற்ற மாதிரி முத்துவும் மீனாவிடம் அன்பாக பழகுவது, சாப்பாடு ஊட்டுவது போன்ற அனைத்து விஷயங்களையும் சந்தோசமாக செய்து வருகிறார்.

இதை பார்த்த குடும்பத்தில் அனைவரும் வாயடைத்து போய், கண்கொள்ளா காட்சியாக பார்த்து ஆனந்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் மாமியார் மட்டும் வயிற்று எரிச்சல் படுகிறார். இப்படி இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருவதை மக்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த நாடகம் தான் விஜய் டிவியின் சூப்பர் என்று சொல்லும் படியாக மக்களிடத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Trending News