சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மனோஜை விட தொழிலதிபராக வளர்ந்து காட்ட மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜயாவை வெறுப்பேற்றும் முத்து ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தனக்கு தெரிந்த தொழிலை ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப மீனாவிற்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதாவது மீனாவுக்கு நல்லாவே பூக்கட்ட தெரியும். அதிலும் சீக்கிரமாகவும் வித்தியாசமாகவும் பண்ண தெரியும் என்பதால் அதன் மூலம் ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று முத்து ஐடியா கொடுத்திருந்தார்.

அதன்படி மீனா திருமண மண்டபத்தில் தெரிந்தவர்களிடம் மேடையை அலங்கரிக்கும் விதமாக சில மாடல்களை காட்டி இருந்தார். அதன் மூலம் மீனாவிற்கு தற்போது ஒரு ஆஃபர் கிடைத்து இருக்கிறது. பூ வைத்து அலங்கரிக்கும் விதமாக மேடையை செய்து கொடுக்குமாறு மீனாவிற்கு ஒரு பிசினஸ் கிடைத்திருக்கிறது. அதற்கு அட்வான்ஸ் பணத்தையும் வாங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.

வந்ததும் இந்த சந்தோஷமான விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் ஸ்வீட் கொடுத்து சொல்கிறார். ஆனால் வழக்கம் போல இதை பார்த்த விஜயா மட்டம் தட்டும் விதமாக நீ என்ன பெரிய தொழிலதிபர் என்று மனசுல நினைக்கிறாயா. வீடு வீடா பூ கொடுத்துட்டு இருந்த இப்ப மண்டலத்தில் போய் பூ கொடுக்க போற அவ்வளவுதான் வித்தியாசம் என்று நக்கல் அடிக்கிறார்.

ஆனால் முத்து, இப்பொழுது உன்னுடைய பிசினஸ் சின்ன லெவல்ல ஆரம்பித்து இருக்கு, இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த ஆஃபர் உன்னை தேடி வந்து ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து காட்டுவாய் என்று புகழ்ந்து பேசுகிறார். இதைக் கேட்டதும் மனோஜ் தொழிலதிபர் ரேஞ்சுக்குள்ள படிப்பு தகுதி மூளை எல்லாம் வேண்டும். சும்மா எடுத்த உடனே யாரும் தொழில் அதிபராக முடியாது என்று மீனாவை கிண்டல் அடிக்கிறார்.

அதற்கு முத்து, திறமை நேர்மை தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்று சொல்லிய நிலையில் கிடைத்த முதல் ஆஃபர் மூலம் அனைவருக்கும் பிரியாணி சமைத்து போடலாம் என்று முத்து சொல்கிறார். உடனே 10000 அட்வான்ஸ் பணத்தை முத்துவிடம் மீனா கொடுக்கிறார். இதை பார்த்ததும் விஜயா, மனோஜ் மற்றும் ரோகிணி வாய் அடைத்து போய்விட்டார்கள்.

அந்த வகையில் மீனா மட்டன் வாங்குவதற்காக கசாப்பு கடைக்கு போகிறார். அங்கே ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி, மீனாவை பார்த்தவுடன் முகத்தை மறைத்துக் கொண்டு கறியை கொடுத்து விடுகிறார். மீனாவும் சந்தேகம் எதுவும் இல்லாமல் அந்த கறியை வாங்கிட்டு வந்து வீட்டில் பிரியாணி சமைக்கிறார். ஆனால் மனோஜ் கடைக்கு வச்ச சூனியத்தின் பரிகாரப்படி விஜயா மற்றும் மனோஜ் விரதம் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது விஜயா மற்றும் மனோஜ் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. உடனே ரோகிணி, நல்லவேளை மனோஜ் உனக்கு யாரை பிடிக்கும்னு கேட்ட பொழுது என்னன்னு சொல்லாம உங்க அம்மாவை சொல்லி என்ன இந்த விஷயத்தில் இருந்து காப்பாற்றி விட்டாய் என்று சொல்லி பிரியாணியை சாப்பிட போகிவிட்டார்.

அதே மாதிரி முத்துவும், விஜயா மற்றும் மனோஜை வெறுப்பேற்றும் விதமாக முத்துவும் மீனா சமைத்த பிரியாணியை சாப்பிட்டு வெறுப்பேற்றுகிறார். இதனை தொடர்ந்து மனோஜ் அவருடைய பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அதற்கு பதிலாக மீனா பிசினஸை வளர்த்துக் காட்டும் விதமாக வெற்றியை பார்க்க போகிறார்.

Trending News