வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

44 வயதாகியும் மீனாவை கட்டிக்க ஆசைப்பட்ட ரசிகர்.. அதுக்கு அவங்க என்ன சொல்லிருக்காங்க பாருங்க!

ஒரு சில நடிகைகளுக்கு இளம் வயதிலேயே மார்க்கெட் இல்லாமல் தடுமாறுகின்றனர். ஆனால் மீனாவுக்கு மட்டும் எப்படித்தான் வயசு ஆக ஆக மார்க்கெட் இருந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

90களில் தென்னிந்திய சினிமாவை தன்னுடைய கைக்குள் வைத்திருந்த நடிகை கண்ணழகி மீனா. கவர்ச்சியாக இருந்தாலும் சரி, குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும் அதுவாகவே மாறும் தன்மை கொண்டவர்.

இதன் காரணமாகவே அவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அதேபோல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களும் மீனாவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஜோடி போட்டனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மீனா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அதுவும் குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மீனாவுக்கு செம மார்க்கெட் உருவாகியுள்ளது.

மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்? என கேட்டார். அதற்கு மீனா கொஞ்சம் லேட் என ஜாலியாக பதில் கொடுத்துள்ளார்.

meena-insta-post
meena-insta-post

மீனா நடிப்பில் அடுத்ததாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

Trending News