ஒத்த கையெழுத்தால் மொத்தத்தையும் இழக்க போகும் மீனா.. சந்தோஷத்தில் விஜயா, முத்துக்கு காத்திருக்கும் பிரச்சினை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதி அம்மா வீட்டுக்கு வந்து சண்டை போட்டு போனதால் சுருதிக்கும் ரவிக்கும் இடையே சின்ன விரிசல் ஏற்பட்டு விட்டது. இதனால் ரவி தனியாக நின்று மொட்டை மாடியில் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே மனோஜ் மற்றும் முத்து வருகிறார்கள். வந்ததும் ஆளுக்கு ஒரு அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் மனோஜ், நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதே என்று சொல்கிறார்.

முத்து, தன்மானம் தான் முக்கியம் மாமனார் சம்பாத்தியத்தில் நாம் முன்னேற கூடாது என்று அட்வைஸ் பண்ணுகிறார். கடைசியில் ரவி, வெற்றியோ தோல்வியோ அது நான் எடுத்து வைக்கும் முயற்சியில் தான் நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதனால் யாருடைய பண உதவியும் எனக்கு தேவை இல்லை என்று சொல்லிவிடுகிறார்.

இதே பஞ்சாயத்து அடுப்பாங்கரையில் மீனா சுருதி மற்றும் ரோகினிக்கு நடக்கிறது. வழக்கம் போல் ரோகிணி வில்லங்கமாக பேசி சுருதி மனதை மாற்ற பார்க்கிறார். அனல் மீனா, நியாயம் தர்மம் தன்மானம் என்று பேசி சுருதிக்கு புரிய வைக்க பார்க்கிறார். கடைசியில் மீனா மற்றும் ரோகினிக்கு சண்டை வந்து தான் மிச்சம், சுருதிக்கு இரண்டு பேரும் பேச்சையும் கேட்டு குழம்பியதால் எதுவும் பேசாமல் வாயை மூடுகிறார்.

அடுத்ததாக மீனாவுக்கு ஒரு கல்யாண மண்டபத்தில் ஆர்டர் கிடைக்கிறது. பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் மீனா அட்வான்ஸ் பணத்தையும் பெற்று விடுகிறார். ஆனால் அந்த மண்டபத்தின் ஓனர் நீங்கள் பணம் வாங்கி இருக்கீங்க என்பதற்காக இந்த அக்ரிமெண்டில் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்கிறார். மீனாவும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு விடுகிறார்.

அத்துடன் வீட்டிற்கு வந்து எனக்கு ரெண்டு லட்சம் ரூபாய்க்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லி முத்துவிடம் சந்தோஷப்பட்டு கொள்கிறார். முத்துவும் இது நல்ல நியூஸ் என்று மீனாவை தூக்கி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அந்த வகையில் ரோகினி மனோஜ் மற்றும் விஜயா வயிற்று எரிச்சலில் இருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, மீனாவை பாராட்டும் விதமாக பேசி புகழ்ந்து தள்ளி விட்டார்.

ஆனால் இதற்குப் பிறகுதான் ஒரு ஆப்பு இருக்கிறது என்பதற்கு ஏற்ப மீனா போட்ட ஒரு கையெழுத்தால் மொத்தமாக தலையெழுத்து மாறப்போகிறது. அதாவது அந்த ஆர்டர் மீனாவுக்கு கிடைப்பதற்கு காரணம் சிந்தாமணி தான். அந்த அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கியதும் சிந்தாமணி தான். அதன்படி அந்த அக்ரீமெண்டில் மீனாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சில சதிகளை சிந்தாமணி பண்ணி இருக்கிறார். இனி மீனா தொடர்ந்து பிசினஸ் பண்ண முடியாத அளவிற்கு ஒரு ஆப்பு வைத்து இந்த விஷயத்தை விஜயாவிடமும் சொல்லி விடுகிறார்.

விஜயா என்ன ஆனாலும் பரவாயில்லை மீனா பிசினஸில் ஜெயிக்க கூடாது அத்துடன் இனி பிசினஸ் பற்றி யோசிக்கவும் கூடாது என்று சொல்லி சிந்தாமணி இடம் சந்தோஷப்பட்டு கொள்கிறார். அந்த வகையில் மீனாவுக்கு வரப்போகும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு மீனா மட்டும் இல்லாமல் முத்துவும் முழிக்கப் போகிறார். மீனாவை எப்படி பிரச்சனையிலிருந்து சரி செய்ய வேண்டும் என்று முத்து அடுத்து அல்லல்பட போகிறார்.

Leave a Comment