வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கிரிஷ் பிறந்தநாளுக்கு போகும் மீனா முத்து.. அதிர்ச்சியில் ரோகினி, விஜயாவை புலம்பி விட்ட மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா சமைத்து கொடுத்த சாப்பாடுக்கு முத்து எதுவும் சொல்லாமல் போன நிலையில் மீனா பெட் கட்டியதில் தோற்றுப் போய்விட்டார். பிறகு தோழிகள் முன் முத்துவிற்கு கால் பண்ணி சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்கிறார். அதற்கு முத்து, முக்கியமான சவாரியே பிக்கப் பண்ணுவதற்கு அவசரமாக போய்க்கொண்டு இருக்கிறேன். இப்பொழுது இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை டென்ஷன் படுத்தாதே என்று திட்டி போன் வைத்து விடுகிறார்.

இதனால் மீனாவை தோழிகள் கிண்டல் அடிக்கிறார்கள். பிறகு கோபத்துடன் வீட்டிற்கு மீனா போய் விடுகிறார். அடுத்ததாக விஜயா, பார்வதி வீட்டுக்கு போய் புலம்புகிறார். என்னை அந்த வீட்டில் ஒரு மனுசியாக கூட யாரும் மதிக்கவில்லை. அங்கே இருப்பது ஏதோ சர்க்கஸ் கூட்டத்தில் இருக்கிற மாதிரி இருக்கிறது. அதுவும் இந்த மீனா வேலைக்குப் போன பிறகு என்னை கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குது.

மறைந்து நின்று வேடிக்கை பார்க்கும் ரோகினி

அதற்கேற்ற மாதிரி இந்த ஸ்ருதியும், ஜாடை மடையாக என்னை பேசி வம்புக்கு இழுக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நான் சம்பாதித்தால் மட்டும் தான் சரி செய்ய முடியும் என்று புலம்பித் தவிக்கிறார். உடனே பார்வதி, பரதநாட்டியத்தில் ஏதாவது ஆபர் வைத்து சொல்லிக் கொடுத்தால் கூட்டமாக சேர்வார்கள். அதற்கு நாம் குறைந்த விலையில் பரதநாட்டிய டிரசை வாங்கிட்டு அதிலிருந்து கொஞ்சம் காசை அதிகரித்து கொடுக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

இது நல்லா ஐடியாவாக இருக்கிறது என்று பார்வதி மற்றும் விஜயா ட்ரஸ் கடைக்கு போகிறார்கள். அதே கடைக்கு ரோகிணி, க்ரிஷ்க்கு டிரஸ் வாங்குவதற்கு வந்திருக்கிறார். பிறகு பையனுக்கு கோட் வாங்கி அதை வீடியோ காலில் அனுப்பி காட்டிவிடுகிறார். பிறகு விஜயா, ரோகிணியை பார்த்து யாருக்கு டிரஸ் வாங்க வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி ஒரு கிளைன்ட் விட்டு பங்க்ஷன் அதை மொத்தமாக நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.

அதனால் அதற்கு தான் டிரஸ் எடுக்க வந்தேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். பிறகு விஜயா வாங்கின ட்ரெஸ்ஸுக்கும் ரோகிணியை பில் கட்ட சொல்கிறார். அப்படியே ஹோட்டலிலும் சாப்பிட்டு போகலாம் என்று ரோகிணியை கூட்டிட்டு சாப்பிட்டு அதையும் ரோகினியை பில் கட்ட சொல்கிறார். ஆக மொத்தத்தில் இந்த விஜயாவுக்கு பணம் இருந்தால் போதும் மற்ற எந்த விஷயமும் கண்ணுக்குத் தெரியாது என்பதற்கு ஏற்ப தான் நடந்து கொள்கிறார்.

இப்படி விஜயா இருக்கும் வரை ரோகிணி ஏமாற்றிக் கொண்டே தான் போவார். இதனை தொடர்ந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் முத்து, ஆசை ஆசையாக மீனாவிற்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கிறார். அப்பொழுது மீனா கோபத்தில் இருந்ததால் அவரை சமாதானப்படுத்தி ரொமான்ஸ் பண்ணுகிறார் முத்து. உடனே மீனாவும் அந்த புடவை கட்டிட்டு வந்து இருவரும் சேர்ந்து செல்பி எடுத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.

இதனை தொடர்ந்து க்ரிஷ் இன் பிறந்தநாள் மீனாவுக்கு ஞாபகம் வருகிறது. உடனே முத்துவிடம் சொல்கிறார். இருவரும் சேர்ந்து ரோகினி அம்மா வீட்டுக்கு போய் கிரிஷ்க்கு வாழ்த்து சொல்கிறார்கள். அப்பொழுது முத்து, உன் பிறந்தநாள் கூட உங்க அம்மா வரவில்லையா என்று கேட்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியும் வந்து விடுகிறார். ஆனால் முத்து மற்றும் மீனாவை பார்த்ததில் அதிர்ச்சியாகி வெளியே நின்னு மறைந்து நின்று வேடிக்கை பார்க்கிறார். இதுலயாவது ரோகிணி கொஞ்சம் மாட்டினால் நன்றாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News