பாண்டியன் குடும்பத்திற்கு குலசாமியாக இருக்கும் மருமகள்.. திருந்தாத அரசி, சுகன்யாவின் சதி வேலைக்கு வைத்த ஆப்பு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலுவை காதலித்ததால் பாண்டியன் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தது. இதனால் அரசி படித்தது போதும் இனி கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் என்று பாண்டியன் முடிவு பண்ணி அவருடைய அக்கா மகனை பொண்ணு பார்க்க குடும்பத்துடன் வர சொல்லிவிட்டார். ஆனாலும் அதுவரை அரசி படிக்கப் போக வேண்டும் என்று முடிவு பண்ணிய மூன்று மருமகளும் புருசனை வைத்து கோமதி மற்றும் பாண்டியனிடம் பேசுகிறார்கள்.

அந்த வகையில் எப்படியோ கோமதி பாண்டியன், அரசி படிக்கப் போகட்டும் என்று சம்மதம் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் அரசி எந்த காலத்திலும் தனியாக எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிய நிலையை மூன்று அண்ணன்களும் நாங்க போய் கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று பொறுப்பேற்று விடுகிறார்கள். இருந்தாலும் கோமதிக்கு அரசி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

பிறகு சுகன்யாவை சந்தித்த குமரவேலு நான் அரசியை பார்த்து பேச வேண்டும் என்று கெஞ்சுகிறார். உடனே சுகன்யா இப்பொழுது அரசி காலேஜுக்கு கிளம்பி கொண்டிருக்கிறாள். அதனால் நான் அவளை கூட்டிட்டு காலேஜுக்கு வந்து விடுகிறேன். வரும்பொழுது உனக்கு நான் மெசேஜ் பண்ணி விடுகிறேன், நீ நேரடியாக காலேஜுக்கு வந்து அரசிடம் பேசி அவள் மனசை மாற்றி விடு என்று சொல்கிறார்.

அடுத்ததாக அரசி காலேஜுக்கு கிளம்பியதும் செந்தில் நான் போய் விட்டுட்டு வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அங்கே வந்து சுகன்யா உங்களுக்கு வேலை ஏதாவது இருக்கும், அதை போய் பாருங்கள். நான் வீட்டில் சும்மா தானே இருக்கிறேன் நான் போய் ஆட்டோவில் விட்டுட்டு வருகிறேன் என்று சொல்லி அரசியை கூட்டிட்டு காலேஜுக்கு கிளம்பி விடுகிறார். ஆனாலும் சுகன்யா மீது மீனாவுக்கு வந்த சந்தேகத்தின்படி மீனா, நீங்கள் கூட்டிட்டு போக வேண்டாம் என்று சுகன்யாவை பார்த்து சொல்கிறார்.

ஆனால் கோமதி, பரவாயில்லை சுகன்யாவை கூட்டிட்டு போயிட்டு வரட்டும் என்று சொல்லி சுகன்யாவுடன் அனுப்பி வைக்கிறார். பிறகு காலேஜில் குமரவேல் அரிசியை பார்த்து பேசுகிறார். ஆனால் மீனாவுக்கு வந்த சந்தேகத்தின்படி செந்திலிடம் என் மனசுக்கு ஏதோ தப்பாக இருப்பது போல் தெரிகிறது. நீ என்னுடன் காலேஜுக்கு வா என்று கூட்டிட்டு கிளம்புகிறார். அப்படி மீனா மற்றும் செந்தில் போன நிலையில், அரசிடம் குமரவேலு பேசுவதை பார்த்து விடுகிறார்.

உடனே செந்தில், குமரவேலுவை அடித்து வெளியே அனுப்பி விடுகிறார். பிறகு மீனா, அரசியை காலேஜுக்குள் போ என்று சொல்லிவிட்டு இதற்கெல்லாம் காரணம் நீங்க தானே என்று சொல்லி சுகன்யாவின் சதி வேலையை கண்டுபிடித்து விடுகிறார். அந்த வகையில் இனி சுகன்யாவிடம் இருந்து மீனா, பாண்டியன் குடும்பத்தை குலசாமியாக இருந்து காப்பாற்றி விடுவார்.

ஆனாலும் இந்த அரசி குமரவேலுவிடம் என்னை பார்த்து பேச முயற்சி பண்ணாதீங்க என்று ஒரேடியாக சொல்லாமல் மறுபடியும் மக்கு மாதிரி நின்னு பேச ஆரம்பிக்கிறார். இந்த அரசி இப்போதைக்கு திருந்த வாய்ப்பே இல்லை. அதனால் சக்திவேல் மற்றும் சுகன்யா போட்ட பிளான் படி குமரவேலுவை தான் அரசி கல்யாணம் பண்ணுவார்.

Leave a Comment