புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தங்கமயிலின் சாயத்தை வெளுக்க கூட்டணி போடும் மீனா ராஜி.. கடுப்பான கோமதி, அக்கப்போர் பண்ணும் பாண்டியன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் பொருத்தவரை மீனா மட்டும் ராஜி தானாக வந்த மருமகள்கள். ஆனால் தங்கமயில் தான் தேடிப் பார்த்து கூட்டிட்டு வந்த மருமகள். அதனால் எப்போதுமே எனக்கு அவர்தான் பெருசு என்று சொல்வதற்கு ஏற்ப ஓவராக தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அந்த வகையில் தங்கமயில் என்ன பண்ணாலும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்.

இதனால் கடுப்பான கோமதி எரிச்சலுடன் இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தங்கமயிலும், பாண்டியனை கவுக்கும் வகையில் ரொம்ப நல்ல பொறுப்பான மருமகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடையில் வேலை பார்க்கும் மாமனருக்கு சாப்பாடு கொடுக்கும் விதமாக சாப்பாடு எடுத்து வைக்கிறார். இதனை பார்த்த கோமதி கடையில் சித்தப்பா மற்றும் தாத்தாவும் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

பாண்டியனை தாஜா பண்ணும் தங்கமயில்

உடனே தங்கமயில் அவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போகிறேன் என்று கடைக்கு கொண்டு போகிறார். இதனை பார்த்த கோமதி கடுப்பில் மீனாவிற்கு ஃபோன் பண்ணி புலம்புகிறார். அப்பொழுது ராஜி மற்றும் மீனாவிடம் கோமதி நிச்சயமாக மாமாக்கு இந்த மாதிரி பண்ணுவது பிடிக்காது. அதனால் வீட்டுக்கு திரும்பியதும் மாமா தங்கமயிலை கூப்பிட்டு திட்டப் போகிறார் என்று சொல்கிறார்.

ஆனால் பாண்டியன் வீட்டிற்கு வந்து தங்கமயிலை பாராட்டி சாப்பாடு கொடுத்து அனைவரையும் சந்தோஷப்படுத்தி விட்டார். அத்துடன் தங்கமயில் சாப்பாடு கொடுத்ததினால் இன்னும் அதிகமாக எங்களால் வேலை பார்க்க முடிந்தது என்று கோமதி இடம் புகழ்ந்து தள்ளுகிறார். இதனால் தொடர்ந்து கோமதி அப்செட் ஆகி புலம்புகிறார். இது எல்லாம் கேள்விப்பட்ட மீனா வீட்டிற்கு திரும்பியதும் தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்டலாம் என்று ராஜிடம் சொல்ல போகிறார்.

அந்த வகையில் ராஜி மற்றும் மீனாவும் சேர்ந்து தங்கமயிலின் சாயத்தை சீக்கிரம் வெளுக்கும்படி பண்ண போகிறார்கள். அப்போதுதான் இந்த பாண்டியனுக்கு தெரியவரும் இது தங்கமயில் இல்ல பித்தளை என்று. அப்பொழுது மொத்தமாக பாண்டியன் உடைந்து போய் நிற்கப் போகிறார். அது மட்டும் இல்லாமல் நான் பார்த்து கூட்டிட்டு வந்த மருமகள் எந்த அளவுக்கு பொய்ப் பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிந்ததும் மொத்தமாக உடைய போகிறார்.

அதுவரை தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஓவர் புராணத்தை பாடி அக்கப்போர் பண்ண போகிறார். அடுத்ததாக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த ஒரு சீரியல்தான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு சூடு பிடித்து வருகிறது. இதனை இன்னும் அதிகரிக்கும் வகையில் கதிர் மற்றும் ராஜியின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றால் இன்னும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்து விடும்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முந்தைய சம்பவங்கள்

Trending News