புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சில்வர் ஜூப்ளி இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த மீனா.. பின்னாளில் வாய்ப்பு கேட்டு அலைந்த சம்பவம்

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது நடிப்பால், கவர்ச்சியால், பேச்சால் திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்களை வரை கவர்ந்தவர் தான் கண்ணழகி மீனா. 1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலாமானார்.

அந்த வகையில் ராஜ்கிரணின் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான மீனா, தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை மீனா, பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்ததையடுத்து, பிற்காலத்தில் அவரிடமே வாய்ப்புக் கேட்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மற்ற நடிகைகளை காட்டிலும், நடிகை மீனா அனைவருக்கும் பிடித்தமான நடிகை எனலாம்.

Also Read: விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா

இருந்தாலும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவும் யோசித்து தான் முடிவெடுப்பாராம். அதே போல மற்றவர்கள் சொல்வதை கேட்பதை காட்டிலும், அவருக்கு தோன்றுவதை மட்டுமே அதிகமாக மீனா செய்வாராம். அந்த வகையில் தமிழில் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடிய படத்தில் மீனா நடித்த நிலையில், அப்படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என பல முறை யோசித்ததாக அன்மையில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, மீனா, சங்கவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து செம ஹிட்டான படம் தான் நாட்டாமை. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் வெறும் 55 லட்சம் பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படம் வெளியாகி 200 நாட்கள் திரையரங்கில் ஓடிய நிலையில், கிட்டத்தட்ட 12 கோடி வரை மாபெரும் வசூலானது.

Also Read: சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

இதனிடையே நடிகை மீனா இப்படத்தில் நடிக்க கமிட்டாவதற்கு முன்பாக, பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதால் எப்படி நமக்கு பெயர் கிடைக்கும் என அதிகமாக யோசித்தாராம். மேலும் மீனாவின் நண்பர்கள் இப்படத்தில் நடிக்க கூறிய நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் 20 நாள் கால்ஷீட் கொடுத்து மீனா தயங்கித் தயங்கி தான் நாட்டாமை படத்தில் நடித்தாராம். ஆனால் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டவுடன் வானத்துக்கும், பூமிக்கும் மீனா குதித்தாராம்.

அந்த அளவுக்கு சந்தோஷத்தில் இருந்த மீனா, தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், அவ்வை ஷண்முகி, முத்து, சுயம்வரம், வில்லன் உள்ளிட்ட தொடர் 6 படங்களில் நடித்தார். அதன் பின்னர் மீனாவுக்கு பட வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் கே.எஸ் ரவிகுமாரிடம் சென்று பட வாய்ப்பு தருமாறு மீனா கேட்டாராம். அதன் பின்பு அஜித் நடித்த வில்லன் படத்தில் இரண்டாம் நாயகியாக மீனாவை கே.எஸ். ரவிக்குமார் நடிக்க வைத்துள்ளார். இதுவே நடிகை மீனா, கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடித்த கடைசி படமாகும்.

Also Read: தேடிப் போய் வாய்ப்பு கேட்ட மீனா.. செட்டாகாது என ரிஜெக்ட் செய்த ரஜினி

Trending News