சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பாவுக்கு பழிக்கு பழி என பயத்தை காட்டிய மீனா.. இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸின் பூர்வீக வீடை தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்ட மீனாவின் அப்பா அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார்.

இதனால் தற்போது குடும்பமே கதிரின் சிறிய வீட்டில் தங்கி உள்ளனர். மறுபுறம் அவர்கள் வாங்கிய வீட்டுமனையில் வீடு கட்டவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அந்த விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீனாவின் அப்பாவை அழைக்காமல் விட்டுவிட்டனர்.

Also Read: வைரமுத்து மோசமான ஆளு பார்த்து பழகணும்.. எச்சரித்த சின்மயிக்கு பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா

அதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக தற்போது மீனாவின் தங்கையின் நிச்சயதார்த்தத்தில் எப்படியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வரவழைத்து அவமானப்படுத்தி இருக்கிறார். நிச்சயதார்த்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்திய மீனாவின் அப்பா, கடைசியில் பந்தியில் அமர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எழுப்பி விட்டார்.

இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டனர். ஆனால் மீனா குடும்பத்தினரை காணும் என்று தேடிய போது ஈஸ்வரி மூலம் எல்லா உண்மைகளும் மீனாவிற்கு தெரிய வருகிறது. உடனே வெறியேறிய மீனா தன்னுடைய தந்தையிடம் கோபமாக சென்று, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அப்படி என்ன பாவம் செய்தார்கள். ஏன் இப்படி அவமானப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

Also Read: பெரிய பணக்காரரை வளைத்து போட்ட விஜய் டிவியின் முக்கிய பிரபலம்.. சத்தமில்லாமல் செய்யப்போகும் 2வது திருமணம்

நிச்சயம் கல்யாணம் நடப்பதற்குள் முன், நீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு முன்பு கெஞ்சி கொண்டு நிற்பீர்கள்’ என்று சவால் விட்டு கிளம்புகிறார். பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை பார்த்த மீனா அவர்களிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்.

தன்னுடைய அப்பாவால் ஏற்பட்ட அவமானத்தை நினைத்து கூனி குறுகுகிறார். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மீனாவை சமாதானப்படுத்துகின்றனர். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தரங்கெட்ட வேலைகளை பார்க்கும் மீனாவின் அப்பாவை அவருடைய மகளே பழிக்கு பழி வாங்க வேண்டும் என வெறிகொண்டு காத்திருக்கிறார்.

Also Read: விக்ரமனை மட்டம் தட்டும் விஜய் டிவி.. மக்களுக்காக குரல் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இருப்பினும் மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை இரண்டாகஉடைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான சதி வேலைகளையும் ஒவ்வொன்றாக பார்க்கிறார். இதில் அப்பா ஜெயிப்பாரா அல்லது மகள் விட்ட சபதம் ஜெயிக்குமா என்பதை பார்க்க சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News