புதன்கிழமை, மார்ச் 12, 2025

தோற்றுப் போய் நிற்கும் மீனா, சந்தோஷத்தில் ஆடும் விஜயா.. சிந்தாமணியை ஓட ஓட விரட்ட நடக்க போகும் யுத்தம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா எடுத்திருக்கும் கல்யாண டெக்கரேஷன் ஆர்டரை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக பணம் தேவைப்பட்டது. அதற்காக வட்டிக்கு விடும் ஒரு நபரை சந்தித்து மீனா அவருடைய போராட்டங்களை எடுத்து சொல்லி தேவையான பணத்தை பெற்று விடுகிறார். அந்த வகையில் மீனா மீது நம்பிக்கை வைத்த அந்த நபர் வட்டி எதுவும் வேண்டாம்.

நீங்கள் சொன்னபடி கல்யாண ஆர்டரை முடித்துவிட்டு இரண்டு நாட்களில் வந்து அசலை மட்டும் சரியாக கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்படி மீனா, தோழிகளை வைத்து கல்யாண மண்டபத்தில் செய்ய வேண்டிய அனைத்து டெக்கரேஷன்களையும் நல்லபடியாக செய்து விடுகிறார். இதனால் மீனாவுக்கு அங்கே நல்ல பாராட்டுக்கள் கிடைத்து விடுகிறது.

இந்த சந்தோஷத்தை முத்துவிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக மீனா வீட்டிற்கு வந்து வீடியோ காலில் முத்துவிடம் பேசிக்கொண்டு செய்த டெக்கரேஷன்கள் அனைத்தையும் போட்டோ மூலமாக அனுப்பி வைத்து ரொமான்ஸ் பண்ணிக் கொள்கிறார்கள். உடனே முத்துவும், நாளைக்கு மீதமுள்ள பணத்தை வாங்கி நம்மளுக்கு உதவி செய்த நபரிடம் திருப்பி கொடுத்துவிடு என்று சொல்கிறார்.

மீனாவும் முதல் வேலை நாளைக்கு அதுதான், ஏனென்றால் நம்மளை நம்பி வட்டி இல்லாமல் பணத்தை கொடுத்து இருக்கிறார். அதற்கு நன்றி கடன் நம் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்று மீனா முத்துவிடம் சொல்கிறார். உடனே மறுநாள் மண்டபத்திற்கு சென்று அந்த ஓனரை சந்தித்து பேசுகிறார். அந்த ஓனரும் நீங்கள் நன்றாக செய்து முடித்திருக்கிறீர்கள் என்று சொல்லி நன்றி தெரிவிக்கிறார்.

உடனே மீனா மீதமுள்ள பணம் வேண்டும் என்று கேட்ட நிலையில் ஓனர் சும்மா விளையாடாதீங்க நான் எல்லா பணத்தையும் கொடுத்து விட்டேன். மறுபடியும் என்ன பணம் கேட்கிறீங்க என்று ஆப்பு வைத்து விட்டார். இது எதிர்பார்க்காத மீனா, இல்லாத பட்டவர்களை இப்படி ஏமாற்றி பிழைக்கிறீர்களே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் அந்த ஓனர் மீனாவை மண்டபத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். இதனால் மணமுடைந்து அழுது கொண்டே தோற்றுப்போன தருணத்தில் மீனா அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை எல்லாம் மீனாவுக்கு தெரியாமல் அங்கு இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிந்தாமணி இனி மீனா, பிசினஸை பற்றி யோசிக்கவே முடியாது. இந்த நஷ்டத்தை சரி செய்யவே மீனாவுக்கு நேரம் போதாது என்று சொல்லி விஜயாவுக்கு போன் பண்ணுகிறார்.

விஜயாவிடம் உங்க மருமகளின் கொட்டம் இனி அடங்கிவிடும், அதற்கான வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்லி மீனா நஷ்டப்பட்டதை நினைத்து விஜயவும் ஓவராக சந்தோஷத்தில் ஆட ஆரம்பித்து விடுகிறார். ஆனால் மீனாவை பொருத்தவரை இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட மாட்டார். இதற்குப் பின்னணியில் சிந்தாமணி தான் இருக்கிறார் என்று மீனாவுக்கு தெரிய வந்துவிட்டது.

அந்த வகையில் சிந்தாமணி செய்த வேலைக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மீனா சுருதி சீதா மூன்று பேரும் சேர்ந்து சரியான பதிலடி கொடுத்து சிந்தாமணியை இந்த பிசினஸில் இருந்து ஓட ஓட விரட்ட போகிறார்கள். இதுதான் விஜயாவுக்கு விழப்போகும் அடியாக இருக்கப் போகிறது.

Trending News