சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா தாங்கும் மருமகள்.. தனத்துக்கே பயங்கர டஃப் கொடுக்கும் மீனா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து மூன்று மருமகளும் அடுத்தடுத்து கர்ப்பமாக இருப்பதால் மீதமிருக்கும் மீனாவின் நிலை தான் திண்டாட்டமாக இருக்கிறது. இந்த சமயத்தில் மீனாவிடம் இதை எதிர்பார்க்கலையே! என ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சீரியலில் தும்ஸம் செய்து கொண்டிருக்கிறார்.

வீட்டில் இருக்கும் தனம், முல்லை, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் கர்ப்பமாக இருப்பதால் அவர்கள் அனைவரையும் உட்கார வைத்துக் கொண்டு மீனாதான் எல்லா வேலைகளையும் பார்க்கிறார். முன்பு மூத்த மருமகளாக இருக்கும் தனம் தான் வீட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வார் வீட்டில் இருப்பவர்களையும் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறி பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்

ஆனால் இப்போது தனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் மீனாவின் பெர்ஃபார்மன்ஸ் அடித்து தூள் கிளப்புகிறது. தற்போது மீனா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஒத்த ஆளாக தாங்கி பிடித்து, வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் படபடவென வேலை செய்கிறார்.

இதையெல்லாம் பார்த்த மீனாவின் கணவர் ஜீவாவுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி ஏற்பட்டாலும், சொகுசாக வளர்ந்து இவ்வளவு வேலை செய்கிறாரே! என்று ஆச்சரியத்தில் திகழ்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் வேலைகளில் மீனாவிற்கு உறுதுணையாக இருக்கிறார். இது ஒரு பக்கம் மீனாவிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

Also Read: குடும்ப மானத்தை குழி தோண்டி புதைக்கும் மருமகள்.. பாண்டியன் ஸ்டோர்ஸை ரணகளமாக்கிய மீனா

அதேசமயம் மீனா இவ்வளவு வேலை செய்கிறார்! என்று அவருடைய அம்மாவிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. இது ஒரு சில நாட்கள் நன்றாக போகும். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கண்டிப்பாக மீனா ஜீவாவிடம் ‘நான் என்ன வீட்டு வேலைக்காரியா’ என்று மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் பேசுவார்.

இதை சீரியலில் எத்தனை தடவை பார்த்திருக்கிறோம். இருப்பினும் தற்போது மீனா மற்ற மூன்று மருமகள்களையும் உட்கார வைத்துக்கொண்டு பணிவிடை செய்வது பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதே என்று ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: பிரேக் அப், நம்பிக்கை துரோகத்தை நானும் சந்தித்திருக்கிறேன்.. கண் கலங்கிய பிரியா பவானி சங்கர்

Trending News