வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாண்டியனிடம் செந்திலின் எக்ஸாமை பற்றி சொன்ன மீனா.. சக்திவேல் ஆட்டத்துக்கு ராஜி அப்பா கொடுத்த பதிலடி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி தைரியமாகவும் சந்தோஷத்துடனும் டியூஷன் எடுப்பதற்கு கிளம்பிவிட்டார். அந்த வகையில் பாண்டியனிடம் மாமா நான் டியூஷனுக்கு கிளம்பிட்டேன் போயிட்டு வரேன் என்று சொல்கிறார். பாண்டியனும் ஓகே என்று சொல்லிய நிலையில் பழனிச்சாமி, டியூஷன் எடுப்பதற்கு பஸ்ஸில் போனால் உன்னுடைய நேரம்தான் வேஸ்ட் ஆகும். அதனால் கதிர் கூட நீ போய்விடு என்று சொல்கிறார்.

உடனே பாண்டியன் அந்த ஓட்டசைக்கிளில் எப்படி போக முடியும் என்று கேட்கிறார். அதற்கு ராஜி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் கதிர் கூட சைக்கிளில் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்படி கிளம்பும்போது சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை மட்டம் தட்டி பேசும் விதமாக ராஜியை ஓடிப்போனவள், வெறும் பையனுடன் வாழ்கிறார் என்று குதர்க்கமாக பேசினார்.

இதை பார்த்து சும்மா இல்லாமல் ராஜி, தன் வாக்குபட்டு போன குடும்பத்திற்காகவும் புருஷனுக்காகவும் சக்திவேலை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அத்துடன் எந்த வேலையும் பண்ணாமல் பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிற நீங்கள்லாம் எங்கள் குடும்பத்தை பற்றி பேசக்கூடாது. உங்களால் சுயமாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது என்று நல்ல நாலு கேள்வி கேட்டு விட்டார்.

இதனால் கோபமடைந்த சக்திவேல், வீட்டிற்குள் சென்று முத்துவேலுவிடம் ராஜியை தர குறைவாக பேசி ஓவராக ஆட்டம் ஆடினார். இதை பார்த்து கோபமடைந்த முத்துவேல், சக்திவேல் கன்னத்தில் பளார் என்று ஒரு அரையறைந்து இனி ராஜியை பற்றி பேச தேவையில்லை. அவள் எப்படி இந்த குடும்பம் வேண்டாம் என்று போனாலோ, அதே மாதிரி நாமும் அவள் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வது தான் நல்லது.

சும்மா எதற்கெடுத்தாலும் ராஜியை பற்றி பேசுவதை நிப்பாட்டிவிடு. உன் பையனுக்கு நான் பொண்ணு பார்த்து வைக்கிறேன் அதுவரை சும்மா இருந்தால் போதும் என்று சக்திவேலுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார் ராஜி அப்பா. இதற்கிடையில் செந்தில், எப்படியாவது கவர்மெண்ட் உத்தியோகத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது படித்திருக்கிறார்.

அந்த வகையில் நாளைக்கு எக்ஸாம் வந்து இருக்கிறது, அதில் செந்தில் எழுத போக வேண்டும் என்ற விஷயத்தை மாமாவிடம் சொல்லுங்க என்று மீனா, செந்தில் இடம் சொல்கிறார். ஆனால் செந்தில் பயத்தினால் சொல்ல தவிக்கிறார். பிறகு மீனா, செந்தில் எக்ஸாம் எழுத போகிற விஷயத்தை பாண்டியனிடம் போட்டு உடைத்து விட்டார். உடனே பாண்டியனும் படிக்கிற காலத்திலேயே செந்தில் ஒழுங்கா படிக்காமல் போய்விட்டான்.

இப்பொழுது எப்படி அவனால் எக்ஸாம் எழுத முடியும் கவர்மெண்ட் வேலையே வாங்க முடியும் என்று கொஞ்சம் நக்கலாக பேசுகிறார். ஆனாலும் ஏதோ ஒன்னு முயற்சி எடுக்கிறாய் அதை ஒழுங்கா பண்ணு என்று சொல்லிவிட்டு பாண்டியன் கிளம்பி விடுகிறார். ஆனால் போகும்பொழுது தங்கமயில் இடம் நீயும் இதே மாதிரி ஒரு எக்ஸாம் எழுதி முயற்சி எடுத்து பாரு.

அதுவரை ஏதாவது ஒரு ஸ்கூல்ல டீச்சராக வேலைக்கு போ. நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கிறேன் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், நான் ஒன்று சொன்னால் தப்பா நினைக்காதீங்க மாமா. வீட்டில் பத்து பேர் இருக்கிறோம் என்றால் எல்லோரும் வேலைக்கு போய் விடுகிறார்கள். நானும் போய்விட்டால் அத்தையால் சமாளிக்க முடியாது. அதனால் வீட்டில் உள்ள வேலையை நானும் அத்தையும் எடுத்து பார்க்கிறோம் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் கோமதி, இத்தனை நாள் நான் தனியாக தான் பார்த்தேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்த பொழுது என்னால் போக முடியவில்லை. அதனால் நீயாவது வேலைக்கு போயிட்டு வா என்று சொல்கிறார். இப்படி எல்லாரும் சேர்ந்து தங்கமயிலே வற்புறுத்தி வேலைக்கு அனுப்ப பார்க்கிறார்கள்.

ஆனால் தங்கமயில் படித்திருந்தால் தானே வேலைக்கு போக முடியும் சும்மா பொய் பித்தலாட்டம் பண்ணிட்டு இருந்தால் எப்படி வேலை கிடைக்கும். அந்த வகையில் தங்கமயில் படிக்கவில்லை என்ற விஷயம் அடுத்து பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது.

Trending News