ஏமாந்து போன மீனா, சிந்தாமணியை தோற்கடிக்க கூட்டணி போட்ட சுருதி.. விஜயா முகத்தில் கரியை பூச போகும் மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், வேண்டாத மருமகள் கைபட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்ற ஒரு சொலவடை உண்டு. அது போல தான் விஜயா வீட்டுக்கு முத்துவை கல்யாணம் பண்ணிக்கொண்டு மருமகளாக வந்த மீனா எது செஞ்சாலும் அதில் குறை கண்டுபிடித்து அவமானப்படுத்துவதே விஜயாவின் வேலையாக இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி மீனா செய்யும் பிசினஸை காலி பண்ண வேண்டும் என்று நினைத்த விஜயாவுடன் சிந்தாமணி கூட்டணி போட்டு விட்டார். அதன்படி இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்து அதில் அட்வான்ஸ் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்த நிலையில் ஒரு அக்ரிமெண்ட் பேப்பரில் மீனாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

இதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சி தெரியாமல் மீனாவும் கையெழுத்து போட்டார். ஆனால் அந்த கையெழுத்தால் தலையெழுத்தை மாறப்போகுது என்பதற்கு ஏற்ப மொத்த பணத்தையும் கொடுத்தாச்சு என்பதற்கு ஏற்ப அந்த அக்ரிமெண்ட் தயாராக இருக்கிறது. கல்யாண மண்டபத்தில் ஆர்டரை நல்லபடியாக முடித்துக் கொடுத்த மீனாவுக்கு மீதி பணம் கிடைக்காமல் நஷ்டம் ஆகிவிட்டது.

இதனால் எப்படியாவது அந்த மண்டபத்தில் இருக்கும் ஓனரிடம் பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மீனா ஐடியா பண்ண ஆரம்பித்து விட்டார். மீனாவுக்கு உதவியாக சுருதி மற்றும் சீதா இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இந்த சதிக்கு பின்னாடி இருக்கும் சிந்தாமணியை முகத்திரை போட்டு கிழிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்கள்.

அத்துடன் இதன் மூலம் மீனாவை தோற்கடித்து ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வரும் விஜயாவுக்கும் மீனா சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பணத்தை திரும்ப பெற்று பிசினஸிலும் ஜெயித்து விஜயாவின் முகத்தில் கரியை பூச போகிறார்.

Leave a Comment