திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வேலைக்கு போகாமல் தண்டமாக வீட்டில் இருந்து ஊதாரித்தனமாக செலவு செய்கிறார். போதாக்குறைக்கு கடன் வாங்கி அதையும் என் தலையில் கட்டுகிறார் என்ற கோபத்தில் ரோகினி இருந்தார். ஆனால் தற்போது ரோகிணி பற்றிய ஒரு விஷயம் மனோஜ்க்கு தெரிய வந்துவிட்டது.

அதாவது ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் போய்க் கொண்டிருக்கும் பொழுது பேங்க் ஆபீஸர்ஸ் வந்து ரோகினி வாங்கிய கடனை கேட்கிறார்கள். 4லட்சத்தை பேங்க்ல லோன் வாங்கி அதுக்கு வட்டியும் கட்டாம அசலையும் கொடுக்காமல் அலைய விடுகிறார் என்று ரோகினியை கண்ணாபின்னான்னு நடுரோட்டில் வைத்து திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இனி நீ தான் இதற்கு பொறுப்பேற்று கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மனோஜிக்கும் வார்னிங் கொடுத்துட்டு போயிட்டார்கள். ஏற்கனவே மனோஜ் ஒரு பொறுப்பு இல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றுகிறார். அவரிடம் போய் இதை கேட்டதும் ரோகிணியை மனோஜ் திட்டி விடுகிறார். எனக்கு தெரியாமல் இன்னும் என்னெல்லாம் மறைச்சு வச்சிருக்கியோ என்று கோபப்படுகிறார்.

Also read: ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

அதற்கு ரோகிணி நானாவது கடன் தான் வாங்குகிறேன். உன்ன மாதிரி பணத்தை திருடிட்டு போகல என்று அசிங்கப்படுத்தி விட்டார். உடனே மனோஜ் கோபப்பட்டு எதுவும் பேசாமல் போய்விடுகிறார். ரோகிணி பற்றி தெரிந்த இந்த விஷயத்துக்கே இப்படின்னா இன்னும் பல விஷயங்கள் கமுக்கமாக இருக்கிறது. அதை எல்லாம் தெரிந்தால் ரோகிணி கெதி அவ்ளோதான்.

அடுத்தபடியாக முத்து அவருடைய நண்பர் மூலம் மாலையை கெட்டும் வாய்ப்பை மீனாவிற்கு வாங்கி கொடுக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகை 20,000 பெற்று மீனா-விடம் கொடுத்து விட்டார். அந்த வகையில் இதன் மூலம் பெரிய தொகையாக இரண்டு லட்ச ரூபாய் வரை கிடைக்கும். இந்த காசு வந்ததுக்கு அப்புறம் மீனா முத்துவிற்கு அந்த காரை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி விடுவார்.

இதற்கிடையில் மாலை கட்டுவதற்கு பூ வாங்க போவதற்கு மீனாவை முத்து தான் ஆட்டோவில் வைத்து கூட்டிட்டு போகிறார். அப்பொழுது இவர்கள் இருவருக்கும் ரொமான்ஸ் மற்றும் அன்பு அதிகரிக்கிறது. அத்துடன் இதன் மூலம் இவர்களுடைய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்பது போல் தெரிகிறது.

Also read: ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

Trending News