வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

துல்கர் மனைவியாக நடித்ததே தவறு? வெளிப்படையாக கூறிய மீனாட்சி சவுதரி

சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துல்கரின் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படமாகவும் உள்ளது. இந்த படம் நடுத்தர மக்களுக்கு மிகவும் கனெக்ட்டான ஒரு படமாகவும் உள்ளது. இந்த படம் அமரனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்டு, அமரன்-க்கு நல்ல tough கொடுத்த ஒரு படமாகவே உள்ளது.

இந்த படத்தில் துல்கரின் மனைவியாக மீனாட்சி சவுதிரி நடித்திருப்பார். அவரது நடிப்பு நல்ல பாராட்டை பெற்றுக்கொடுத்தது. மேலும் கோட் படத்தில் வேற லெவல் குத்தாட்டம் போட்டுவிட்டு, இந்த படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக மீனாட்சி நடித்தது, அவரது நடிப்பு திறமைக்கு ஒரு சான்றாகவே அமைந்தது. ஆனால் இனி, இப்படி நடிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்

துல்கர் மனைவியாக நடித்ததே தவறு?

மீனாட்சி சவுதிரி-க்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில், இவருக்கு ஒரு சிலர் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள், “இப்போது இளமையாக உள்ளீர்கள்.. இந்த நேரத்தில், நீங்க நல்ல இளமையான ஜோலியான கதாப்பாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்துங்கள்..”

“இப்போதே நீங்கள் மனைவியாக நடித்தால், பிறகு மனைவி கதாபாத்திரத்திலே நடிப்பதற்கு உங்களை அணுகுவார்கள்.. அதனால், லக்கி பாஸ்கர் படத்தையே, முதலும் கடைசியுமாக வைத்துக்கொள்ளுங்கள்..” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதை கேட்ட பிறகு, மீனாட்சி திட்டவட்டமாக கூறிவிட்டார். “இனிமேல் மனைவி ரோலில் நடிக்கமாட்டேன்.. ஜோலியான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் ” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கோட் படத்தில் நீங்க விஜய் கூடவே டான்ஸ் ஆகியிருந்தாலும், மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை..

ஆனால் இந்த படம் உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது..நீங்கள் சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, துல்கருக்கு மனைவியாக நடித்ததே தவறு என்று பீல் பண்ணுவது போல உள்ளது.. அப்படி தான் நினைக்கிறீர்களா? என்று முன்னுக்கு பின் முரணாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்

Trending News