புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருடிய பணத்தை முத்துவிடம் திருப்பி கொடுக்கும் மீனாவின் தம்பி.. யாருன்னு தெரியாமலே ஓவராக குதிக்கும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் மற்றும் ரவி இரவு முழுவதும் மாடியில் தான் தூங்கி இருக்கிறார்கள் என்பது விஜயாவுக்கு தெரிந்ததும் ஏன் எதற்கு என்று தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறார். பிறகு ஒவ்வொருவரிடமும் போய் கேட்கிறார். ஆனால் யாருமே விஜயாவை பெருசாக மதித்து பேசவில்லை.

பிறகு அண்ணாமலை இது கணவன் மனைவிக்குள் இருக்கிற ஒரு விஷயம். அதில் நீ தலையிட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் விஜயாவுக்கு தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பிறகு மீனாவிற்கு அவருடைய அம்மா போன் பண்ணி தம்பி வேலைக்கு போவதாக சொல்கிறான் என்று பேசி வருத்தப்படுகிறார். உடனே மீனாவும் வீட்டிற்கு போய் தம்பியை கண்டிக்கிறார்.

ஆனால் மீனாவின் தம்பி என்னால் இந்த குறுகிய வட்டத்திற்குள் வாழ முடியாது. ஏழையா பிறந்தது வேணா தப்பா இருக்கலாம் ஆனால் ஏழையாகவே இருக்க முடியாது. அதனால் அந்த சிட்டி கூட நான் வேலைக்கு போறேன்னு முடிவு பண்ணிட்டேன். என்னை யாரும் தடுக்க வேண்டாம் என்று சொல்லி கிளம்பி விட்டார். பிறகு மீனாவின் தம்பி, விஜயாவிடம் இருந்து திருடிய பணத்தை எடுத்துட்டு வந்து முத்துவிடம் கொடுக்கிறார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

முத்துவும் அதை எடுத்துட்டு வீட்டிற்கு போய் குடும்பத்தில் அனைவரும் இருக்கும் பொழுது அண்ணாமலை இடம் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறார். இது எப்படி கிடைத்தது என்று கேட்கும் பொழுது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததனால் அவர்கள் கண்டுபிடித்து இந்த பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள் என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.

அதற்கு விஜயா, அந்த பணத்தை திருடிய திருடன் யார் என்று தெரியுமா, அவனை சும்மா விடக்கூடாது என்று அசிங்கமாக பேசி திட்டுகிறார். ஆனால் முத்து கடைசி வரை யாரென்று சொல்லாமல் மறைத்து விடுகிறார். அடுத்ததாக ரோகினி பியூட்டி பார்லரில் வைத்து தோழியிடம் மனோஜ் இத்தனை நாட்களாக சர்வர் வேலை தான் பார்த்திருக்கிறார் என்று சொல்லி புலம்புகிறார்.

அந்த நேரத்தில் ரோகினிடமிருந்து பணத்தை வாங்குவதற்காக பிளாக்மெயில் பண்ணும் நபர் வந்து விட்டார். பிறகு என்னால் இப்பொழுது பணம் தர முடியாது என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கும் பொழுது பார்லர் ஓனரும் வந்து விடுகிறார். அடுத்து ரோகினியை இதெல்லாம் இங்க வச்சு நடக்கக்கூடாது, கஸ்டமர் பார்த்தால் சரியாக இருக்காது என்று ரோகினிக்கு வார்னிங் கொடுக்கிறார்.

Also read: விஜயாவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட மீனா.. முத்துவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் ஆசை மனைவி

Trending News