Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு சொந்தபந்தம் யார் என்றும் குலசாமி கோயில் எதுவென்று தெரிந்து விட்டது. அதனால் ஒட்டுமொத்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக குடும்பத்தை கூட்டிட்டு மானாமதுரையில் இருக்கும் குலசாமி கோயிலுக்கு போய் விட்டார். போகும்பொழுது சம்மந்திகளும் வரவேண்டும் என்ற ஆசையில் மீனாவின் அப்பாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி கோவிலுக்கு கூப்பிடுகிறார்.
வழக்கம்போல் மீனாவின் அப்பா பாண்டியனை மதிக்காமல் போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு பாண்டியன் இதெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் குடும்பத்தை கூட்டிட்டு கோயிலுக்கு போன நிலையில் அங்கே அனைவரும் பொங்கல் வைப்பதற்கு தயாராகி விட்டார்கள். அப்பொழுது தங்கமயிலின் அம்மா அப்பா அனைவரும் வந்து விடுகிறார்கள்.
இவர்களை பார்த்தபொழுது மீனாவுக்கு சின்ன வருத்தம் ஆகிப் போய்விட்டது. செந்தில் என்னாச்சு ஏன் உன் முகம் வாடிப் போய்விட்டது என்று கேட்ட பொழுது என் அப்பாவுக்கு எவ்வளவு வீம்பு இருக்கிறது. மாமா கூப்பிட்டும் வர மறுத்து விட்டாரே என்று பீல் பண்ணி பேசுகிறார். அந்த நேரத்தில் திடீரென்று மீனாவின் அப்பா அம்மா வந்து விடுகிறார்கள். இவர்களை பார்த்ததும் செந்தில் அங்கே பாரு யார் வருகிறார்கள் என்று உனக்கு தெரியும் என்று சொல்லி மீனாவை பார்க்க சொல்கிறார்.
அப்படி மீனா பார்த்த பொழுது அப்பா அம்மா வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில் ஓடி போய் அவர்களை வரவேற்கிறார். ஏன் மீனா இப்படி ஓடுகிறாய் என்று கேட்ட கோமதியிடம் செந்தில் அவங்க அப்பா அம்மா வந்திருக்காங்க பாருங்க என்று சொல்கிறார். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதமாக மீனாவின் அப்பா அம்மா வந்ததில் மீனாவுக்கு அதிக சந்தோசம் ஏற்பட்டுவிட்டது.
அதை வெளிக்காட்டி பேசும் பொழுது மீனாவின் அப்பா உனக்காகவும் உன் மாமனார் கூப்பிட்டதற்காகவும் நான் வரவில்லை. உங்க அம்மா கோயில் விஷயம் போய் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் வந்தேன். அது போக கோவில் என்பதால் நானும் வர சம்மதித்தேன் என்று சொல்லி கொஞ்சம் வரட்டு பிடிவாதத்தில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டார்.
இருந்தாலும் நீங்கள் வந்ததே எனக்கு சந்தோசம் தான் என்று மீனா மகிழ்ச்சியாகி விட்டார். பிறகு இவர்கள் இருவரையும் பார்த்த சந்தோஷத்தில் ராஜி கொஞ்சம் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அப்பொழுது கதிர், என்ன உனக்கும் உங்க குடும்பம் ஞாபகம் வந்து விட்டதா என்று கேட்கிறார். அதற்கு ராஜி அவங்க ஞாபகம் எப்போதுமே எனக்கு இருக்க தான் செய்யும்.
ஆனால் இந்த நேரத்தில் கூட அவங்க என் பக்கத்தில் இல்லை என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். உடனே கதிர் நீ இதை முன்னாடியே சொல்லி இருந்தால் அவர்கள் இருவரையும் நான் தூக்கிட்டு வந்திருப்பேன் என்று காமெடியாக பேசி ராஜி மனசை டைவர்ட் பண்ணி விட்டார். பிறகு மொத்த குடும்பமும் சேர்ந்து பொங்கல் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த சந்தோஷமான தருணத்தை பார்த்த பாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்து விட்டார். அடுத்ததாக பொங்கல் விழா முடிந்த கையோடு அந்த ஊரில் சில போட்டிகளும் வைக்கப் போகிறார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் கொடுப்பதாக அறிவித்து விட்டார்கள். உடனே கோமதி அனைவரையும் கூப்பிட்டு மருமகளிடம் போட்ட கண்டிஷன் என்னவென்றால் நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது.
ஆனால் எனக்கு தேவையானது அந்த கிரைண்டர் தான். அதனால் நீங்கள் போட்டியில் வெற்றி பெற்று எனக்கு அந்த கிரெண்டரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விட்டார். அதன்படி அனைவரும் சேர்ந்து போட்டியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் சந்தோஷத்தை வெளிக்கொண்டு வரப் போகிறார்கள். இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப பாண்டியன் உச்சகட்ட சந்தோஷத்தில் திகைத்துப் போய் நிற்கிறார்.