செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Pandian Stores 2: பாண்டியன் அலட்சியத்தால் கேள்விக்குறியாகும் மீனாவின் வாழ்க்கை.. வாயை மூடிட்டு வேடிக்கை பார்க்கும் செந்தில்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டிற்கு தங்கமயிலின் அம்மா அப்பா வருகிறார்கள். வந்ததும் மாப்பிள்ளை சரவணன் பார்த்து பேசிய பிறகு அவருக்காக நாட்டுக்கோழி குழம்பு வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நல்லா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோங்க என்று மருமகனை தாஜா பண்ணி பேசுகிறார்.

பிறகு கோமதி, தங்கமயிலின் அம்மாவிற்கு வீட்டை சுற்றி காட்டு என்று மீனா மற்றும் ராஜியிடம் சொல்கிறார். அதன்படி மீனா மற்றும் ராஜி ஒவ்வொரு அறையும் காட்டி இது எங்களுடைய ரூம். அது ராஜி கதிர் உடைய அறை என்று சொல்கிறார். உடனே தங்கமயிலின் அம்மா, அப்படி என்றால் என்னுடைய மருமகன் சரவணன் ரூம் எது என்று கேட்கிறார்.

அதற்கு ராஜி அவருக்கு ரூம் இல்லை மாடியில் தான் தங்குவார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் தங்கமயிலின் அம்மா முகம் மாறி விட்டது. உடனே மீனா நாங்கள் திருமணம் ஆகி ஒவ்வொருவராக வரும்பொழுது தான் எங்களுக்கு ரூம் ரெடி பண்ணி கொடுத்தார்கள். அதே மாதிரி சரவணன் மாமாக்கு கல்யாணம் ஆனதும் ரூம் ரெடி பண்ணி கொடுத்து விடுவார்கள் என்று மீனா கூறுகிறார்.

மீனாவிற்கு ஆர்டர் போட்ட பாண்டியன்

இதைக் கேட்டதும் தங்கமயிலின் அம்மா அப்படியா இருக்கட்டும் இருக்கட்டும் என்று அலட்சியமாக சொல்கிறார். இதனை தொடர்ந்து பாண்டியன், கல்யாண பத்திரிக்கையை அடித்துக் கொண்டு வருகிறார். அதில் ஒரு பத்திரிகையை எடுத்து கோமதி பூஜை அறையில் வைத்து கும்பிடுகிறார். பிறகு ஒவ்வொருவரும் பத்திரிக்கையை பார்க்கிறார்கள்.

அதில் அனைவருடைய பெயரும் போட்டு இருக்கு என்று சந்தோசமாக பார்த்து பேசிக்கொள்கிறார்கள். பிறகு பாண்டியன், நாள் ரொம்பவே கம்மியாக தான் இருக்கிறது. அதனால் அனைவரும் சேர்ந்து பத்திரிக்கை கொடுத்தால் மட்டும்தான் சீக்கிரமாக சொந்தக்காரர்களுக்கு கொடுக்க முடியும் என்று சொல்கிறார்.

உடனே மீனாவிடம் நீயும் செந்திலும் சேர்ந்து முக்கால்வாசி வீட்டுக்கு கொடுத்து விடுங்கள். மீதி சொந்தக்காரர் வீட்டுக்கு நானும் கோமதியும் சேர்ந்து கொடுக்கிறோம் என்று சொல்கிறார். அதற்கு மீனா சரி மாமா நான் ஆபீஸ் போயிட்டு வந்ததும் சாயங்காலம் நானும் செந்திலும் சேர்ந்து கொடுத்து விடுகிறோம் என்று சொல்கிறார்.

அப்பொழுது பாண்டியன் அப்படி கொடுக்க ஆரம்பித்தால் மாதக்கணக்கில் இழுக்கும். அதனால நீ ஆபீஸ்க்கு லீவு போட்டு பத்திரிகையை கொடுத்து விடு என்று சொல்கிறார். அத்துடன் கல்யாணம் முடியும் வரை நீ வேலைக்கு போக வேண்டாம் என்று மீனாவிடம் சொல்லிவிடுகிறார். ஆனால் மீனாவிற்கு அவ்வளவு நாள் லீவு போட முடியாது என்பதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருக்கிறார்.

இதற்கிடையில் செந்திலிடம் இப்படியே நான் அடிக்கடி லீவ் போட்டுக்கிட்டு இருந்தால் என்னுடைய வேலை இல்லாமல் போய்விடும். அப்படி என்றால் என்னுடைய கேரியரும் கேள்விக்குறியாகி விடும் என்று புலம்புகிறார். ஆனால் இதையெல்லாம் தெரிந்தும் பாண்டியன் சொல்லும் போது செந்தில் எதுவும் சொல்ல முடியாமல் வாயை மூடிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.

ஆனால் இந்த கல்யாணத்துக்கு பிறகு தான் ஒவ்வொருவருடைய சந்தோசமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய போகுது. அதிலும் தங்கமயிலின் அம்மா சதி வேலைகளை பண்ணி அந்த குடும்பத்தில் இருப்பவர்களிடம் சண்டை மூட்டி விடுவார். இதனால் இப்பொழுது இருக்கும் ஒற்றுமை நீடிக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Trending News