ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜாதியை சொல்லி இயக்குனர்களை தரக்குறைவாக பேசிய மீராமிதுன்.. பரபரப்பைக் கிளப்பிய வீடியோ!

மீரா மிதுன் இவரைப் பற்றி கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. தன்னைத்தானே பெரிய செலிபிரிட்டி சூப்பர் மாடல் என்று அவரே கூறிக்கொண்டு வலம் வருகிறார். மனதில் உலக அழகி என நினைத்துக்கொண்டு இவரது முகத்தை அனைத்து நடிகைகளும் காப்பி செய்து வருகிறார்கள் என சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதுவரை அவர் பேசியது எல்லாமே தனிநபர் தாக்குதலாக இருந்தது. ஆனால், இப்போது அவர் பேசியிருப்பது சமூக சர்ச்சை. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மீரா மிதுன் பேசியதாவது, “பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.

திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.

அவர் பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மீராவின் வாய்க் கொழுப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் புகார்களை குவித்து வருகிறார்கள்.

meera-mithun
meera-mithun

யார் இந்த மீரா மிதுன்? சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. ஒரு படம் கூட முழுமையாக நடித்ததில்லை. இவர் வாங்கிய சூப்பர் மாடல் பட்டத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும் தன்னைத்தானே ஒரு மாடல் என சொல்லிக் கொண்டு வலம் வருகிறார். இவருக்கு இவ்வாறு பேச என்ன தகுதி உள்ளது என ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Trending News