ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

என்னை கைது செய்வது உங்கள் கனவில் கூட நடக்காது.. சவால் விட்டு சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்!

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு நெகடிவாக பிரபலமானவர் தான் இந்த சூப்பர் மாடல் மீரா மிதுன். இவர் என்னதான் தனக்குப்பின்னால் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என கூறினாலும், இவரை கழுவி ஊற்றுவதற்கென்றே மிகப்பெரிய கூட்டம் உள்ளது. பிரபலங்களை பற்றி சர்ச்சையாக எதையாவது பேசி பிரச்சனையில் மாட்டிக்கொள்வதே இவரது வேலை.

இதுபோலவே சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வி.சி.க நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல், கலகம் செய்ய தூண்டிவிடுதல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

meera-mithun-cinemapettai
meera-mithun-cinemapettai

இது தொடர்பாக மீரா மிதுன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமாக என்னை கைது செய்யுங்கள்… ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், என்னை கைது செய்வது என்பது நடக்காது, அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய், சூர்யாவைப்பற்றி அவதூறாகப் பேசியது,கொலை மிரட்டல் விடுத்தது, பண மோசடியில் ஈடுபட்டது என பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. இதனால் இவர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது என தகவல் வந்துள்ளது.

மீரா மிதுன் தன்னை காந்தி, நேருவுடன் ஒப்பிட்டுப்பேசியத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Trending News