ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கேவலமாக கஞ்சாவை ஊதித்தள்ளும் மீரா மிதுன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமாரையே ஓவர்டேக் செய்யும் ஒரே நபர் என்றால் அது மீரா மிதுன் மட்டுமே. இவர் பேசும் பேச்சு மற்றும் செயல் என அனைத்துமே தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒன்றை உளறிக்கொண்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொள்ளும் மீரா மிதுனை பலரும் அறிந்ததே இல்லை. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னரே இவரை பற்றி தெரிய வந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

இவர் செய்யும் சர்ச்சை செயல்களுக்கு ஒரு அளவே கிடையாது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் முன்னணி நடிகைகள் தன் முகத்தை காபி செய்கின்றனர் என கூறியது. இவ்வாறு பல சர்ச்சைகளை நிகழ்த்தி நாள்தோறும் தான் மீடியாவில் வரும்படி செய்து கொண்டிருக்கிறார்.

இதுவரை தனிப்பட்ட முறையில் மட்டுமே தாக்கி வந்த மீராமிதுன் சமீபத்தில் ஜாதி ரீதியாக தமிழ் இயக்குனர்கள் சிலரை மிகவும் கீழ்த்தரமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு இவரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கூறினர்.

அதே போல மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான், மீண்டும் மீரா மிதுனின் வீடியோ ஒன்றை ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார். அதில் சாய் பாபா படத்திற்கு அருகில் அமர்ந்து கஞ்சா அடித்து உள்ளார் மீரா. இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல், “போன வாரம் ஜாதி, இந்த வாரம் மதம். இந்த வீடியோவை அவர் டெலீட் செய்துவிட்டார். என்ன இதெல்லாம் மோடி ஜி. இவருக்கு பின்னால் யார் இருப்பது என்று கண்டுபிடிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Trending News