தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் போன்ற சில கவனிக்கப்படும் படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த சில மாதங்களிலேயே அவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அவர் இறக்கும்போது மேக்னா ராஜ் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதன் பிறகு சமீபத்தில் மேக்னாராஜ் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தையின் புகைப்படத்தை யாருக்கும் காட்டாமல் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் மேக்னா ராஜ். மேலும் தன்னுடைய இறந்த கணவரை நினைத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது.
எமோஷனலாக வெளியான இந்த புகைப்படம் இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. மேலும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது கண்டிப்பாக தன்னுடைய கணவர் தான் மகனாகப் பிறப்பார் என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்தார் மேக்னா ராஜ்.
அது அப்படியே நடந்தது ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் மேக்னாராஜ் குடும்பத்தினருக்கும் நெகிழ்ச்சியாக அமைந்துவிட்டதாம். சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.