ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குணசேகரனை மண்ணை கவ்வ வைக்க போகும் மெய்யப்பன்.. அதிரடியாக நுழைந்து ஆட்டத்தை திருப்பிய வாசு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நேற்றைய எபிசோடில் குணசேகரனை கோமாளியாக காட்டி பார்ப்பவர்களை சிரிக்க வைத்து விட்டார் கரிகாலன். எலக்சன் என்றால் இந்த மாதிரி தான் போட்டோக்களை வைக்க வேண்டும் என்று கரிகாலன் பைத்தியக்கார மாதிரி யோசித்து அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரனையும் காமெடி பீஸ் ஆக ஆகிவிட்டார்.

இதில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனும் கூடவே சேர்ந்து போட்டோக்களை எடுத்து அலப்பறை பண்ணி விட்டார்கள். இதை பார்த்த ரேணுகா சரியான கவுண்டர் கொடுக்கும் விதமாக இந்த போட்டோவை வைத்து ஜான்சி ராணி இதுதான் என்னுடைய புருஷன் என்று சொத்தில் பங்கு கேட்டு பிரச்சினை பண்ண போகிறார் என்று நக்கல் அடித்துவிட்டார்.

அடுத்தபடியாக குணசேகரன் தம்பிகளுடன் சேர்ந்து போட்டோவை எடுத்து அதையும் பேனரில் அடிக்க சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி கோமாளித்தனமான விஷயத்தை எல்லாம் செய்ததற்கு காரணம் எலக்ஷனில் ஜெயிப்பதற்காக. இதனைத் தொடர்ந்து கதிர் தற்போது இருக்கும் நிலைமையும் போட்டோக்கள் எடுத்து அனுதாப ஓட்டை வாங்குவதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்.

Also read: நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்

இதற்கிடையில் குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜனனி மற்றும் சக்தி சேர்ந்து வாசுவை வர சொல்கிறார்கள். வாசு வந்தாலே சும்மா அதிரும் என்பதற்கு ஏற்ப அதிரடியாக குணசேகரன் வீட்டிற்குள் புகுந்து அவர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்து விட்டார். அத்துடன் ஈஸ்வரி எலெக்ஷனில் ஜெயிப்பதற்காக சில கார்ப்பரேட் விஷயங்களை ஜனனி வாசு மூலம் செய்யப் போகிறார்.

இந்த விஷயத்தில் கண்டிப்பாக வாசு நல்லபடியாக முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நிச்சயம் ஈஸ்வரி வெற்றி பெறுவார். அத்துடன் இதில் குணசேகரன் தோற்க வேண்டும், எலக்ஷனில் மண்ணை கவ்வ வேண்டும் என்பதற்காக ஜனனியின் உறவு முறை அண்ணனாக இருக்கும் மெய்யப்பன் இதில் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

அதாவது குணசேகரன் இந்த எலக்ஷனில் தோற்று விட்டால், அதன் மூலம் அவருடைய மொத்த கோபமும் ஜனனி மீது திரும்பும். அதுவும் நமக்கு ஒரு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது என்று மெய்யப்பன் ஒரு கணக்கு போடுகிறார். அந்த வகையில் ஈஸ்வரி ஜெயிப்பதற்கு மெய்யப்பன் முடிந்த அளவுக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண போகிறார். கடைசியில் ஈஸ்வரி ஜெயிப்பது உறுதியாகிவிட்டது.

Also read: அராஜகத்துக்கு மேல் அட்டூழியம் பண்ணும் குணசேகரன்.. அப்பாவாக அடைக்கலம் கொடுக்கும் ஜீவானந்தம்

Trending News