சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தம்பியை வைத்து கல்லா கட்டிய சூர்யா.. மூன்று நாட்களில் மெய்யழகன் செய்த வசூல்

Meiyazhagan Collection: 96 போன்ற அற்புதமான படத்தை கொடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி இருந்தது மெய்யழகன் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படமாக எடுக்கப்பட்டுள்ள மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இணைந்து நடித்திருந்தனர்.

முதல்முறையாக இவர்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இவர்களது காமினேஷன் பிடித்திருந்தது. இந்நிலையில் மெய்யழகன் படத்தை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.

மேலும் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிய நிலையில் நல்ல வசூலை மெய்யழகன் படம் பெற்று வருகிறது. முதல் நாளே கார்த்திக்கு சிறந்த ஓப்பனிங் கிடைத்து கிட்டதட்ட மூன்று கோடி வசூலை பெற்றிருந்தது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்க தொடங்கியது.

மெய்யழகன் படத்தின் மூன்றாவது நாள் கலெக்ஷன்

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக வசூலை பெற்றிருந்தது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடியும் வசூல் செய்தது. இதுவரை மெய்யழகன் படம் கிட்டத்தட்ட 16 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது.

படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் போட்ட பட்ஜெட்டை படம் எடுத்து விடும். தனது தம்பியால் சூர்யாவுக்கு நல்ல லாபத்தை தான் மெய்யழகன் படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று திரையரங்குகளில் மெய்யழகன் படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு ஓடிடி மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றிலும் நல்ல விலைக்கு மெய்யழகன் படம் போய் உள்ளது. மேலும் படத்தின் வரவேற்பு காரணமாக அதிக காட்சிகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது.

வசூல் மழையில் கார்த்தியின் மெய்யழகன்

Trending News