
Vivek : ஒரு 15 வருடங்களுக்கு முன்பு ஊடகங்களில் ஒளிபரப்பாகவும் நேர்காணல்கள் மிகவும் ரசிக்கும்படியும், நெறிமுறைகள் உட்பட்டும் இருந்தது. அதன் மூலம் பார்வையாளர்கள் கற்றுக் கொள்ளும்படி தான் இருந்தது.
குறிப்பாக அப்துல் கலாம் அவர்களை சின்ன கலைவாணர் விவேக் பேட்டி எடுத்திருப்பார். இது மிகவும் நகைச்சுவையாகவும், அறிவுபூர்வமாகவும் பல விஷயங்களை கலந்துரையாடி இருப்பார்கள்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தொகுப்பாளினி சிமி கரேவால் பேட்டி எடுத்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி உள்ளது. இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படிதான் அந்த பேட்டி எடுக்கப்பட்டிருந்தது.
கண்ணியமாக நடந்த நேர்காணல்கள்
மேலும் குற்றவாளியான வீரப்பனை சிவசுப்பிரமணியம் பேட்டி எடுத்தார். அதில் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் எப்படி செய்தேன் என்பதையும் வீரப்பன் நடித்துக் காட்டி இருந்தார்.
பில்லா ரிலீஸ் சமயத்தில் கோபிநாத் அஜித்தை பேட்டி எடுத்திருப்பார். மிகவும் நேர்த்தியான கேள்விகளால் அந்த நேர்காணலை அழகுப்படுத்தி இருந்தார். இவ்வாறு அந்த காலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் மனத்திற்கு நெருக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது ஊடகங்களில் வெளியாகும் பேட்டிகள் எல்லாமே வியாபாரத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நடிகையை பேட்டி எடுத்தால் உங்களுக்கு பிடித்த நடிகர், சாப்பாடு என்று கேட்கிறார்கள்.
அதேபோல் படங்களின் விமர்சனத்தையும் டாப் 10 சுரேஷ் எந்த பாகுபாடு இல்லாமல் நடுநிலையாக விமர்சிப்பார். ஆனால் இப்போது சினிமா விமர்சகர்கள் என்ற பெயரில் பல அக்கப்போர்கள் செய்து வருகிறார்கள். ஒருபுறம் பணம் வாங்கிக்கொண்டு நல்லா உள்ள படத்தையும் மோசமாக விமர்சிக்கின்றனர்.