திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கத்ரீனா கைஃப் உடன் லிப்லாக், அமங்களப்படுத்தும் விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர்

Merry Christmas – Tamil Trailer | Vijay Sethupathi | Katrina Kaif: கோலிவுட் முதல் பாலிவுட் வரை வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃப் உடன் ‘மேரி கிறிஸ்மஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிறது.

இந்த ட்ரெய்லரில் பாலிவுட் உச்ச நடிகர் கத்ரீனா கைஃப்-க்கு விஜய் சேதுபதி லிப்லாக் கொடுத்து அமர்க்களம் செய்திருக்கிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. பாலிவுட்டில் ஜவான் ஃபார்ஸி தொடர்ந்து இப்போது மேரி கிறிஸ்மஸ் படத்தில் விஜய் சேதுபதி தொடர்ந்து நடித்துள்ளார்.

மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர்

அதிலும் இந்த படத்தில் கத்ரீனா கைஃப் திருமணமாகி குழந்தை எல்லாம் இருக்கும்போது, கல்யாணத்திற்கு முன்பு எடுத்த உடையை மாட்டிக் கொண்டு ட்ரெய்லரில் விஜய் சேதுபதியுடன் டேட்டிங் செய்கிறார். அப்போது இவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம், அதன் பின் உடனே ஏற்படும் பிரிவு என ட்ரெய்லரில் பரபரப்பு கிளப்பு இருக்கின்றனர்.

எப்படி கிறிஸ்மஸ் ஆனது மேரி கிறிஸ்மஸ் ஆகிறது என்பதை இந்தப் படத்தில் வித்தியாசம் காட்டுகிறார்களாம். விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உடன் காயத்ரி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர் இதோ!

Trending News