திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Metti Oli: மோகன்லால் ஒரு நன்றி கெட்டவன், அவனை எனக்கு பிடிக்காது.. கோபத்தில் கொந்தளித்த மெட்டிஒலி நடிகை

Metti Oli: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. லாலேட்டன் என அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அப்படிப்பட்ட நடிகரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவன் ஒரு நன்றி கெட்டவன் என மெட்டிஒலி பிரபலம் ஒருவர் கொந்தளித்திருக்கிறார். அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்திருக்கும் என இங்கு காண்போம்.

மெட்டிஒலி சீரியலில் மாமியாராக மிரட்டியவர் தான் சாந்தி வில்லியம்ஸ். அதை அடுத்து அவர் எத்தனையோ சீரியல்களில் நடித்தாலும் அந்த ராஜம் கேரக்டர் தான் இன்னும் நிலைத்து நிற்கிறது.

அவர் தற்போது ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் மோகன்லாலை தனக்கு பிடிக்காது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய கணவர் வில்லியம்ஸ் மோகன்லாலை வைத்து நான்கு படங்களை எடுத்திருக்கிறார்.

மோகன் லால் ஒரு நன்றி கெட்டவன்

நல்ல திறமையான கேமரா மேன் ஆக இருந்த வில்லியம்ஸ் மலையாள திரை உலகில் ரொம்பவும் ஃபேமஸ். இப்போதும் கூட அவருடைய திறமைக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது.

அப்படிப்பட்ட அவர் தன் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பாடு போடுவாராம். அப்படித்தான் மோகன்லாலும் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் வீட்டில் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவாராம்.

அப்படி சாந்தி வில்லியம்ஸ் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த அவர் முன்னணி அந்தஸ்தை அடைந்தவுடன் அவர்களை கண்டுக்கவே இல்லையாம். அது கூட பரவாயில்லை வில்லியம்ஸ் இறந்த போது எட்டிக் கூட பார்க்கவில்லையாம்.

ஒரு போன் செய்து கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் யாரோ போல் அவர் நடந்து கொண்டதை என்னால் மன்னிக்கவே முடியாது என சாந்தி வில்லியம்ஸ் கூறியுள்ளார். மேலும் ஏர்போர்ட்டில் ஒருமுறை என்னை பார்த்த போது அவர் தலை தெறிக்க ஓடினார்.

அவர் ஒரு நன்றி கெட்டவர் என தன் கோபத்தை கொட்டி தீர்த்துள்ளார். இதிலிருந்து அவர் எந்த அளவுக்கு காயப்பட்டிருப்பார் என்பது தெரிகிறது. அதனாலயே ரசிகர்கள் இவருக்கு தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.

Trending News