திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மெட்டி ஒலி புகழ் உமாமகேஸ்வரி மரணம்.. 40 வயதில் நடந்த அதிர்ச்சியான சம்பவம்

சன் டிவியில் 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரை இயக்குனர் திருமுருகன் இயக்கி  நடித்திருப்பார்.

இதில் இயக்குனர் திருமுருகனுக்கு ஜோடியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகை உமா மகேஸ்வரி நடித்திருப்பார். இவர்களின் ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

மெட்டி ஒலி சீரியல் முடிந்த பின்பு உமா மகேஸ்வரி வேறு எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.இவர் நடிப்பதை நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக உமா மகேஸ்வரி இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  40 வயதான உமா மகேஸ்வரியின் இழப்பு சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உமா மகேஸ்வரி வெற்றிக்கொடிகட்டு எனும் திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் தங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

uma-maheshwari
uma-maheshwari

Trending News