சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஜய்க்கு எதிராக தரக்குறைவாக ட்வீட் போட்ட மெட்டி ஒலி நடிகர்.. போர்க்களம் ஆகிய இணையதளம்!

Bose Venkat: வாய் இருக்குதுன்னு இஷ்டத்துக்கு பேச கூடாதுன்னு வடிவேல் ஒரு காமெடியில் சொல்லி இருப்பார். அப்படி இஷ்டத்துக்கு பேசி இணையவாசிகளிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் மெட்டி ஒலி நடிகர். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு போஸ் வெங்கட்டாக பரீட்சையமானார் வெங்கட்.

போர்க்களம் ஆகிய இணையதளம்!

மெட்டி ஒலியை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அத்தோடு கன்னிமாடம் மற்றும் சமீபத்தில் ரிலீசான சார் படங்களை இயக்கியிருக்கிறார். நேற்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் நள்ளிரவில் போஸ் வெங்கட் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.

அந்த ட்வீட்டில் ரொம்பவும் தரக்குறைவாக விஜயை விமர்சித்திருக்கிறார். அவர் எழுதி இருக்கும் பதிவில்,”யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்” என்று எழுதி இருக்கிறார்.

போஸ் வெங்கட்டின் இந்த பதிவுக்கு விஜயின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட விழாவில் போது நடிகர் சூர்யாவை போஸ் வெங்கட் அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லியிருந்தார். தற்போது விஜயை இப்படி விமர்சித்திருக்கிறார். நடிகர் போஸ் வெங்கட் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News