புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

மெட்டி ஒலி குட்டி பவானி டூ செய்தி வாசிப்பாளர்.. விஜய் சேதுபதியால் மொத்தமாய் டேமேஜ் ஆன ரேவதி பிரியா

Mettioli: சின்னத்திரை நடிகை ரேவதி பிரியா என்று சொன்னால் பலருக்கும் யார் அது என்று கேள்வி வரலாம். ஆனால் பவானி என்று சொன்னவுடன் இவருடைய முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.

மெட்டிஒலி சீரியலில் சிதம்பரத்தில் கடைசி மகள் பவானி கேரக்டரில் இவர் நடித்திருப்பார். ரேவதி பிரியா பத்தாவது படிப்பு கொண்டிருக்கும் போது வந்த வாய்ப்பு தான் இது.

ரேவதி பிரியாவின் அப்பா, மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகனின் நண்பர் என்ற அடிப்படையில் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குட்டி பவானி டூ செய்தி வாசிப்பாளர்

மெட்டி ஒலிக்கு பிறகு ரேவதி பிரியா கோலங்கள், மேகலா என சன் டிவியின் முக்கிய சீரியல்கள் அனைத்திலும் இருந்தார்.

அதன் பின்னர் இவருக்கு செய்தி வாசிப்பாளராகவும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை இவர் செய்தி வாசிக்கும் போது அட இவங்க மெட்டிஒலி பவானி தானே என்று நமக்கு ஞாபகம் வரும்.

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியால் தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டதாக வருத்தப்பட்டு இருக்கிறார்.

மெட்டி ஒலி சீரியலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பவானி என்று சொன்னாலே அது ரேவதி பிரியா என்று தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.

ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு பிறகு இது வருத்தப்பட்டு இருக்கிறார் ரேவதி பிரியா. விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் பவானி என்று பெயர் வைத்திருப்பார்கள்.

இதனால் மெட்டி ஒலி பவானி என்ற பெயர் அப்படியே மறைந்து விட்டதாக சொல்லி இருக்கிறார் ரேவதி பிரியா.

ரேவதி பிரியா சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான பாரதிதாசன் காலனியிலும் நடித்து ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார்.

Trending News