வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஏவிஎம், எம்ஜிஆர் கூட்டணியில் உருவான ஒரே ஒரு படம்.. பட்ஜெட் மட்டும் இவ்வளவா?

MGR, AVM: எம்ஜிஆர் காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து தொடங்கி தற்போது வரை படங்களை தயாரித்து வரும் பிரபல நிறுவனம் தான் ஏவிஎம். மேலும் சினிமாவில் படங்களை மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களை ஏவிஎம் நிறுவனம் வளர்த்து விட்டுள்ளது. சிவாஜியும் இந்நிறுவனத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்த நிலையில் எம்ஜிஆர் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத விஷயம். அதாவது எம்ஜிஆர் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு வசூலை வாரி கொடுத்து இருக்கிறார்.

Also Read : எம்ஜிஆர் பொறாமைப்படும் அளவிற்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கிய கமல்.. வைக்க கூடாதுன்னு பண்ணிய போராட்டம்

ஏவிஎம் நிறுவனத்திற்கு அன்பே வா என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் சரோஜாதேவி, மனோரமா, நாகேஷ், அசோகன் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அன்பே வா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தின் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட 30 லட்சம் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏவி மெய்யப்ப செட்டியார் மற்றும் எம்ஜிஆர் இருவருமே நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வந்துள்ளனர். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் சேராமல் போனதற்கு என்ன காரணம் என்றும் வெளியாகி இருக்கிறது.

Also Read : லோகேஷ்க்கு முன்பே அந்த ஸ்டைலை ஃபாலோ பண்ணிய எம்ஜிஆர் தயாரிப்பாளர்.. 60களிலேயே இப்படி ஒரு ஜாம்பவானா?

அதாவது அன்பே வா படத்தை தொடர்ந்து வேறு ஒரு படத்திலும் எம்ஜிஆரை நடிக்க வைக்க ஏவிஎம் நிறுவனம் முன் வந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் எம்ஜிஆர் கமிட் ஆகிவிட்டதால் ஏவிஎம் நிறுவனத்திற்கு படம் பண்ண முடியாமல் போய்விட்டதாம். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மட்டுமே தான் அடுத்தடுத்து ஏவிஎம் நிறுவனத்திற்கு எம்ஜிஆர் ஆல் படம் பண்ண முடியாமல் போய்விட்டது.

மற்றபடி ஏவிஎம் நிறுவனம் மற்றும் எம்ஜிஆர் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்ற தெரிய வருகிறது. ஆனாலும் அன்பே வா படம் மூலம் நல்ல வசூலை தான் ஏவிஎம் நிறுவனம் பெற்றிருந்தது. இப்போது இந்நிறுவனம் மீண்டும் தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ள நிலையில் நிறைய வெற்றி படங்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Also Read : எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போல் தமிழ் சினிமாவை ஆண்ட 3 இயக்குனர்கள்.. 50 சதவீத நடிகர்கள் உருவான கதை

Trending News