திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் முறையாக கோடியில் வசூல் செய்த 2 படங்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பாக்ஸ் ஆபிஸில் கொட்டிய பணமழை!

Actor Mgr and Sivaji: தற்போதைய காலத்தின் படி நடிகர்கள் அவர்களுடைய சம்பளமாக கோடிக்கணக்கில் வாங்குவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் முதன் முதலில் கோடிக்கணக்கில் சம்பளத்தை பெற்றதும், அதிக வசூல் செய்த படங்களின் கதாநாயகனாகவும் இருந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி.

அத்துடன் வெளிநாட்டில் படப்பிடிப்பை வைப்பதெல்லாம் தற்போது சர்வ சாதாரணமாக போய்விட்டது. ஆனால் இதை அப்பொழுது நடத்திக் காட்டியது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தான். இப்படி சினிமாவில் நடக்கிற அனைத்து விஷயத்திற்கும் முன்னோடியாக இருந்து சாதனை படைத்த இவர்களுடைய அந்த இரண்டு படங்களை பற்றி பார்க்கலாம்.

Also read: எம்ஜிஆர் பொறாமைப்படும் அளவிற்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கிய கமல்.. வைக்க கூடாதுன்னு பண்ணிய போராட்டம்

அதாவது அந்த காலத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்கிறார்கள் என்று சொன்னதும் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியமாகவும், அப்படிப்பட்ட படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆர்வமாகவும் எதிர்பார்த்து இருந்தார்கள். அதனாலயே தியேட்டரில் போய் இந்த படங்களை பார்க்க வேண்டும் என்று அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று திரையரங்குகளில் படத்தை பார்த்து ரசித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்படத்தின் வசூல் அளவும் தற்போது தெள்ளத் தெளிவாக எவ்வளவு என்று நியூஸ் பேப்பரில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது எம்ஜிஆர் நடிப்பில் 1973 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை வெளிநாட்டில் வைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். அதனாலேயே அதிக பொருட் செலவில் செய்த திரைப்படமாக இன்னும் வரை வரலாறு பேசிக் கொண்டிருக்கிறது.

Also read: எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போல் தமிழ் சினிமாவை ஆண்ட 3 இயக்குனர்கள்.. 50 சதவீத நடிகர்கள் உருவான கதை

அடுத்தபடியாக சிவாஜி நடிப்பில் 1979 ஆம் ஆண்டு திரிசூலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் வெள்ளி விழா கண்ட வெற்றி படமாகவும், 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் ஆகவும் சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வெளிநாட்டில் வைத்து நடத்திருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் அதிக செலவு செய்து எடுத்ததால் வசூல் அளவில் கோடிக்கணக்கில் லாபத்தை பெற்றது. அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபன் 4.2 கோடியும், திரிசூலம் படம் 5.4 கோடியும் வசூலை கொடுத்திருக்கிறது. இப்படங்களின் மூலம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருக்கு சம்பளம் கொட்டோ கொட்டோன்னு அதிகமாக கிடைத்திருக்கிறது.

Also read: எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்

Trending News