வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

60களில் 500 கோடி வசூலித்த எம்ஜிஆர், சிவாஜி படங்கள்.. 200வது படத்தில் துவம்சம் செய்த நடிகர் திலகம்

MGR – Sivaji Ganesan: சமீப காலமாகவே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது என்பது அதன் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் ஆகத்தான் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆனதிலிருந்து ஒவ்வொரு நாளின் வசூலும் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் என்பது ஒரு சில வாரங்களில் எட்டி விடும் அளவுக்கு இருக்கிறது. தற்போது ஆயிரம் கோடி வசூல் என்பதுதான் பெரிய நடிகர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் படம் எத்தனை நாள் தியேட்டரில் ஓடுகிறது என்பதுதான் பெரிய விஷயமாக பேசப்படும். 25 வாரங்களை தாண்டி படம் ஓடிவிட்டால் வெள்ளி விழா ரொம்பவும் விமர்சையாக கொண்டாடப்படும். இப்போதெல்லாம் கார் மற்றும் பைக் போன்ற படத்தின் வெற்றிக்காக எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அன்றைய காலகட்டத்தில் கொடுத்த மெடல் மற்றும் ஷீல்டு தான் இன்று வரை பெருசாக பேசப்படுகிறது.

Also Read:8 தோல்வி படங்களை கொடுத்த கலைஞரின் வாரிசு.. அரசியலிலும் வாங்கிய மரண அடி

அப்போது தொழில்நுட்பங்கள் அவ்வளவாக இல்லாத காரணத்தினால் இந்த வசூல் என்ற விஷயம் பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அப்போது படங்கள் தியேட்டரில் ஓடியதை கணக்கிட்டு பார்த்தால் இன்றைய டிக்கெட் விலையை கம்பேர் செய்து பார்க்கும் பொழுது அதிக அளவில் இருக்கும். அப்படித்தான் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகத்தின் படங்கள் தியேட்டரில் ஓடியதை இன்றைய டிக்கெட் விலையில் கணித்துப் பார்த்தால் 500 கோடி வசூலை கொடுத்திருக்கும்.

இயக்குனர் சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் எங்க வீட்டுப் பிள்ளை. இந்த படத்தில் எம்ஜிஆர் சாட்டையுடன் நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி இன்று வரை யாராலும் மறக்க முடியாது. பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான இந்தப் படத்தின் வசூல் இன்றைய பண மதிப்பின்படி 500 கோடி. கிட்டத்தட்ட 45 நாட்களுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

Also Read:வாய தொறந்தா பாலாபிஷேகம், தோரணம் கட்ட ஆள் இருக்காது.. கமல், எம்ஜிஆர் வளர்த்ததை சீரழிக்கும் விஜய்

இதில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம் என்பதால் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் காட்சி நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை வின்சென்ட் லைட்டிங் மாஸ்க் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த இரண்டாவது படம் இது என்பதால் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான அவருடைய 200 வது படம் தான் திரிசூலம். இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படம் அந்த காலகட்டத்திலேயே 5.4 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதுவும் இன்றைய பண மதிப்பு விவரப்படி 500 கோடி ஆகும். இதில் சிவாஜி, கே ஆர் விஜயா உடன் போனில் பேசும் காட்சி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Also Read:60 வருடத்திற்கு முன்பே எம்ஜிஆர் நடித்த ஏலியன் படம்.. சங்கர் கூட கை வைக்க பயப்பட்ட அயலான் பட கதை, பட்ஜெட்

Trending News