எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் படங்களில் புதுமுகங்கள் வேண்டும் என்று ஒரு உத்தியைக் கையாண்டார். ஒரே மாதிரியான மசாலாப் படங்கள் இருப்பதால், புதுமையை ரசிகர்களுக்கு சுவைக்க கொடுக்க வேண்டும் என எம்ஜிஆர் சில மாற்றங்களை தமிழ் சினிமாவுக்காக அறிமுகப்படுத்தினார்.
அப்படி புதுமுகம் வேண்டும் என்று ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து பெரிய ரிஸ்க் எடுத்தார். அப்போது எம்ஜிஆர் கண்ணில் பட்ட நடிகை ராதா சலுஜா. அந்த நடிகை துவாரகா என்னும் ஹிந்தி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஹிந்தியில் உச்சம் பெற்றார்.
Also Read: எம்ஜிஆரை இழிவுப்படுத்திய 2 படங்கள்.. வாய்ப்பே வேண்டாம் என உதறிய விசுவாசமான நடிகர்
இவருடைய கவர்ச்சிகர பார்வை மட்டும் பேச்சால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகை கொண்டவர். இவர் எம்ஜிஆருடன் இதயக்கனி மற்றும் ‘இன்று போல் என்றும் வாழ்க’ படத்தில் நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதலில் 1975 ஆம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தில் எம்ஜிஆர் உடன் ஜோடி சேர்ந்த ராதா சாலுஜா அந்தப் படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பார். ஆதலால் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.
Also Read: எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்
இதனால் எம்ஜிஆரின் கவர்ச்சி நாயகி என பெயர் போன ராதா சாலுஜா இரண்டு வருடம் கழித்து மீண்டும் 1979 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் ‘இன்று போய் என்றும் வாழ்க’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். இப்படி இவர் 4 படங்களில்தான் தமிழில் நடித்து இருந்தார்.
இவர் ஹிந்தித் திரையுலகின் சில்க் ஸ்மிதா. தமிழில் சில்க் ஸ்மிதாவை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை. ஆனால் அவருக்கு முன்பே பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்த ராதா சாலுஜாவை எம்ஜிஆர் தமிழில் அறிமுகம் செய்தார். இப்படி முதல் சில்க் ஆக ரசிகர்களை கவர்ந்தவர் ராதா சாலுஜா என்பது பலரும் அறியாத உண்மை.
Also Read: எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்