புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என தமிழ் சினிமா ரசிகர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் போற்றப்படும் எம்ஜிஆர் அறுபதுகளின் தமிழ் சினிமா உலகை முடி சூடா மன்னனாக ஆண்டு வந்தார். பொதுமக்களுக்கும், சக கலைஞர்களுக்கும் வாரி கொடுக்கும் வள்ளலாகவே வாழ்ந்து வந்தார் இவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஒரே குடும்பமாகவே இவர் கவனித்துக் கொண்டார்.
அந்த கால சினிமா தற்போதைய சினிமாவை போல் ரொம்பவும் எளிதாக இருந்து விடவில்லை. ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர்கள் அறிமுகமானால் குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு அக்ரீமெண்ட் போடப்பட்டு விடும். அதேபோல்தான் ஹீரோக்களும். புகழ்பெற்ற ஹீரோக்கள் தங்களுடைய படங்களின் நடிக்க ஹீரோயின்களை இத்தனை வருடங்களுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
Also Read:தினந்தோறும் ஜெயலலிதாவை பார்க்க ஆசைப்பட்ட நடிகர்.. அம்மாவின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்தவர்
அந்த வரிசையில் நடிகைகள் கே ஆர் விஜயா மற்றும் சரோஜாதேவி எம்ஜிஆர் உடன் நிறைய படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து வந்த நடிகை தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவர்கள் இருவரும் இணைந்தாலே அது ஹிட் தான் என தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டமாகவே இருந்தது.
ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்த ஜோடியும் கொஞ்சம் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தது. இவர்களது நடிப்பில் வெளியான பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் ராமன் தேடிய சீதை படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. ரசிகர்களுக்கு இந்த ஜோடி சலித்து விட்டது என்பதை புரிந்து கொண்ட எம்ஜிஆர் அடுத்தடுத்த படங்களில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி ஜெயலலிதாவை நடிக்க வைக்கவில்லை.
Also Read:ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி
அப்போதைய அறிமுக நடிகைகளான மஞ்சுளா மற்றும் லதாவுக்கு தான் அடுத்தடுத்து எம்ஜிஆர் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார். இதில் நடிகை லதா உடன் எம்ஜிஆர் கொஞ்சம் நெருங்கி பழகவும் ஆரம்பித்ததாக அப்போதைய செய்திகள் வெளியாகின. இதனால் கோபமடைந்த ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் பேசாமலேயே இருந்து விட்டார். அடுத்தடுத்து சிவாஜி கணேசனின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் ஜெயலலிதா உடைய அம்மாவின் திடீர் மரணம் மற்றும் அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் போன்றவை அவரை தனிமையில் தள்ளியது. வேறு வழி இன்றி தான் ஜெயலலிதா மீண்டும் எம்ஜிஆர் உடன் சேர்ந்தார். அந்த நேரத்தில் மக்கள் திலகம் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்ததால் ஜெயலலிதாவை தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.
Also Read:தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி