ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குடித்தே மரண படுக்கைக்கு சென்ற நடிகர்.. காப்பாற்ற போராடிய எம்.ஜி.ஆர்

MGR: சினிமாவில் மதுக்கு அடிமையான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையையே புரட்டி போட்ட பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. தன்னைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த விஜயகாந்தின் நிலைமையை இப்போது பார்க்கும்போது ரசிகர்கள் மிகுந்த மனகவலையில் இருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சி இருந்த நடிகர் ஒருவர் குடிக்கு அடிமையாகி மரணப் படுக்கைக்கே சென்றிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் அந்த காலம் தொடங்கி இப்போது வரை நகைச்சுவை நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் மிகவும் புகழ்பெற்றவர் சுருளிராஜன்.

எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை, திருவிழா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சிவாஜி கணேசன் உடன் இணைந்து ராஜராஜ சோழன், தங்கப்பதக்கம், ரோஜாவின் ராஜா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் 1982 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற தமிழக அரசு விருதையும் வாங்கி இருக்கிறார்.

Also Read : ரஜினி, எம்ஜிஆர் மீது எதிர்ப்பை காட்ட பழிவாங்கப்பட்ட 2 படங்கள்.. இரண்டு தலைகள் செய்த உச்சகட்ட அராஜகம்

சினிமாவில் இவ்வாறு கோலோச்சி இருந்த சுருளி ராஜன் தனது 42 வது வயதில் 1980 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதற்கு காரணம் அவருடைய மது பழக்கம் தான். அதாவது இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றால் வெளிநாட்டு சரக்கு வாங்கி கொடுத்தால் போதுமாம். நடிகர் உடனடியாக நடிக்க வந்து விடுவாராம்.

அவருடைய இந்த பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நிறைய தயாரிப்பாளர்கள் வாய்ப்புகளை வாங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் சுருளிராஜனுக்கு இளநீரில் மதுவை கலந்து அவரது நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவருடைய கல்லீரல் பாதிப்பு அடைந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் தான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் சுருளிராஜனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுகளில் இருந்து மருந்துகளை வர வளைத்தார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சுருளிராஜன் உயிரிழந்தார். நல்ல திறமை இருந்தும் நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் குடியால் மொத்தத்தையும் சுருளிராஜன் இழந்துவிட்டார்.

Also Read : எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல் வரிசையில் முட்டி மோதிய அஜித்- விஜய்.. அதல பாதாளத்திற்கு சென்ற 4வது தலைமுறை

Trending News