1977 முதல் 1987 வரை கிட்டத்தட்ட 9 வருடங்களாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார் எம்ஜிஆர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலி தலைவன் பிரபாகரனுக்கு எம்ஜிஆர் உதவி செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1985 சென்னையில் ரண்டு இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரனைக் கைது செய்கின்றனர். அது அறிந்த எம்ஜிஆர் உடனே காவல்துறைக்கு ஆணையிட்டு அவரை விடுதலை செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அவரை அழைத்து நீ பெரிய தலைவனாக வருவாய் என எதிர்பார்த்தேன், ஆனால் இப்படி தவறு செய்வதா என்று கேட்டுள்ளார்.
இதனை தெளிவுபடுத்திய பிரபாகரன் அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள் என எம்ஜிஆரிடம் முறையிட்டுள்ளார். என் மேல் எந்த தவறும் இல்லை என்னை நம்புங்கள் என்று கூறினாராம். அடுத்த 5 வருடங்கள் கழித்து பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவராக பொறுப்பேற்று தமிழ் மக்களுக்காக போராடி வந்துள்ளார்.
அதையும் தாண்டி எம்ஜிஆர் இந்தியக் கடற்படையின் உதவியின் மூலம் பண உதவி, ராணுவத்திற்கு தேவைப்படும் துப்பாக்கிகள் போன்றவற்றை ரகசியமாக தமிழ்நாட்டிலிருந்து கொடுத்துள்ளார்.
அந்த அளவிற்கு தமிழீழத்தை காப்பாற்றுவதற்காக எம்ஜிஆர் அப்போதே உதவி செய்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. தமிழ் நாட்டில் இது போன்ற தலைவர்கள் உதவியுடன் பிரபாகரன் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு என்று ஒரு தனி ராஜ்யத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் துரதிஸ்டவசமாக சில துரோகிகளின் சூழ்ச்சியில் இறந்த போன சம்பவம் இப்போதும் நினைத்தால் கூட மிகுந்த வேதனை அளிக்கிறது.