தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தேங்காய் சீனிவாசன். தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு புகழ் பெற்றவர். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார்.
நடிகர் ஜெயச்சந்திரனின் உயிர் நண்பரான தேங்காய் சீனிவாசன் அவரது 80 % படங்களில் நடித்துள்ளார். பின்பு படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி ஒரு சில படங்களை தயாரித்துள்ளார்.
அப்போது “கிருஷ்ணன் வந்தான்” எனும் படத்தை தயாரிக்கும் போது பணம் பற்றாக்குறையால் நின்றுள்ளது. நடிப்பைத் தாண்டி தயாரிப்பில் ஆர்வம் செலுத்தி வந்த தேங்காய் சீனிவாசன் பல லட்சங்களை அப்போது இழந்து உள்ளாராம். நடுத்தெருவுக்கு வந்த சூழ்நிலையில் நெருங்கிய நண்பர்களிடம் பண உதவி கேட்டுள்ளார்.
அப்போது எம்ஜிஆரை சந்தித்து பணம் உதவுமாறு கேட்டதற்கு எம்ஜிஆர் அப்போதே படம் தயாரிக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன் என் பேச்ச நீ கேட்கவே இல்லை என்று திட்டி அனுப்பி விட்டாராம்.
ஆனால் தேங்காய் சீனிவாசன் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து அவர் வீட்டில் வைத்துள்ளார் எம்ஜிஆர். அந்த அளவிற்கு நட்பை சம்பாதித்து வைத்துள்ளார் தேங்காய் சீனிவாசன்.
25 லட்ச ரூபாய் என்பது இன்றைய காலகட்டத்தில் பல கோடிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் வெற்றியும் கண்டுள்ளார்.