வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கவிஞரை செருப்பால் அடித்த எம்ஜிஆர்.. பழகிய பாவத்திற்கு இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துவது ?

Actor MGR: சிறந்த நடிகர், மற்றும் பொறுப்பான அரசியல் தலைவருமாக இருந்து மக்கள் மனதில் இன்று வரை நிலையாக நிலைத்திருப்பவர் யார் என்றால் அது கண்டிப்பாக எம்ஜிஆர். தற்போது தமிழ் சினிமா இந்த அளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் இவருடைய புரட்சிகரமான நடிப்பு. இவர் சினிமாவிற்கு முன் உதாரணமாக இருந்து வழிநடத்திய விஷயங்கள் தான்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் நிறைய சர்ச்சையான விஷயங்களை சந்தித்து அதை இவருக்கு சாதமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்றால் எம்ஜிஆர் மற்றும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். எம் ஜி ஆர் படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்றால் அது கண்ணதாசன். ஆனால் இவருக்கு அரசியலில் அதிக ஆசை உண்டு. அதனால் முதலில் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதன் பின் திமுகவிற்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

Also read: எம்ஜிஆர் கருணாநிதி சந்தித்த ஒரே மேடை.. 60 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தின் சாட்சி

அப்பொழுது மேடையில் பேசிய கண்ணதாசன் சில இடத்தில் எம்ஜிஆரை கொஞ்சம் தாறுமாறாக விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திமுகவில் தான் இருந்தார். இதனால் கண்ணதாசன் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆர், அவர் மேல் வெறுப்படைந்ததால் இவரின் படங்களில் கண்ணதாசன் பாடல் எழுத வேண்டாம் என்று முடிவு எடுத்து வாலியை இவருடைய படத்தின் பாடல்களை எழுத வைத்தார்.

அதன் பின் ஒரு சமயத்தில் எம்ஜிஆர் கட்சியை தனியாக ஆரம்பித்து அதற்கு அரசவை கவிஞராக வாலியை தான் நியமிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கண்ணதாசனை நியமித்து விட்டார். அதற்கு காரணம் என்னதான் அரசியல் ரீதியான பிரச்சனை இருந்தாலும் கண்ணதாசனும் எம்ஜிஆர் உயிருக்கு உயிரான நண்பர்கள் என்பதால் தான்.

Also read: கருணாநிதி கிட்டயே வேலையை காட்டிய எம்ஆர் ராதா.. சும்மா விடுவாரா?

அத்துடன் கண்ணதாசனின் தமிழ் மீது எம்ஜிஆருக்கு எப்பொழுதுமே அளவு கடந்த மரியாதை இருந்திருக்கிறது. அதனால் எம்ஜிஆர் வேற எதைப் பற்றியும் யோசிக்காமல் கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமித்திருந்தார். பிறகு இதைக் கேள்விப்பட்ட கண்ணதாசன் குடும்பத்தினர் நீங்க என்னெல்லாம் அவரைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அவர் உங்களுக்கு நல்லது தான் பண்ணி இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கண்ணதாசன், எம்ஜிஆர் என்னை செருப்பால் அடித்து பழகிய நண்பர் என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தி விட்டிருக்கிறார். அதற்கு தான் நான் அவரை அவ்வளவு விமர்சித்தேன் என்று கூறி இவருடைய குடும்பத்தை சமாளித்திருக்கிறார். அத்துடன் அவர் சொன்னது எம்ஜிஆர் சாகும் வரை முதலமைச்சராக இருந்து தான் இறப்பார் என்று எங்களிடம் என்னுடைய அப்பா கூறியதாக இவருடைய மகள் விஷாலி கண்ணதாசன் கூறியிருக்கிறார்.

Also read: எம்ஜிஆர் கொடுக்கத்தயங்கும் பொருளை பரிசாக பெற்ற நடிகர்.. வெளிவந்த 40 வருட ரகசியம்

Trending News