வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரே ரூமில் ட்ரீட்மென்ட் பார்த்த எம்ஜிஆர், MR ராதா.. துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விளக்கிய ராதாரவி

திரை உலகில் மர்மமான எத்தனையோ சம்பவங்கள் இருந்தாலும் இன்று வரை தெளிவு கிடைக்காத ஒரு சம்பவமாக இருப்பது எம்ஜிஆர், எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு சம்பவம்தான். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் இருவரும் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது ஏன் என்று பலருக்கும் இப்போது வரை குழப்பமாக இருக்கிறது.

இது பற்றி எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி தற்போது ஒரு பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது சம்பவம் நடந்த அன்று எம் ஆர் ராதாவை பார்ப்பதற்காக அவருடைய மனைவியும், 14 வயதே ஆன ராதாரவியும் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் தீவிர ரகளையில் ஈடுபட்டதால் சுவர் ஏறிக்குதித்து மருத்துவமனை உள்ளே அவர்கள் நுழைந்துள்ளனர்.

Also read : எம்ஜிஆருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட விருது.. இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத கௌரவம்

விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜியும் பதைபதப்புடன் அங்கு ஓடோடி வந்திருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் ஸ்தம்பித்துப் போகும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. என்னவென்றால் படுகாயம் அடைந்த எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் ஒரே அறையில் தான் ட்ரீட்மென்ட் நடந்திருக்கிறது.

நடுவில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டும் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது எம்.ஆர். ராதா நல்ல தெளிவான மனநிலையில் நன்றாக பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அதனால் தான் அவரை உடனடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது.

மேலும் எம்ஜிஆர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு எம் ஆர் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வந்தது தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எம் ஆர் ராதாவின் உடலில் இருந்த இரண்டு குண்டுகள் அவருடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் கிடையாது. அப்படி என்றால் எம்ஜிஆர் தான் என் அப்பாவை சுட்டிருக்க வேண்டும் என்று ராதாரவி கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த விஷயம் கற்பனை கலந்த ஒரு மர்மமாகவே நீடித்து வருகிறது.

Also read : சிவாஜியை பட்டை தீட்டிய எம் ஆர் ராதா.. நடிகவேல்-லை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்

போலீஸ் விசாரணையில் கூட எம் ஆர் ராதா நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி தான் சுட்டுக் கொண்டோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த போது கூட அவர் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் சுட்டுக் கொள்ளவில்லை என்று எதார்த்தமாக பதில் அளித்தார். இந்த சம்பவம் நடந்த சில வருடங்களிலேயே அவர்கள் இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர். ஆனால் பின்னாளில் இந்த நிகழ்வு சில கற்பனைகள் கலந்து பரவியது. ஆனால் உண்மையில் ராதாரவி கூறுவது போன்று இந்த விஷயம் சில மர்மங்கள் நிறைந்து தான் இருக்கிறது. இப்போது வரை அந்த மர்மம் என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை.

Also read : ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம் ஆர் ராதா போட்ட முன்று கண்டிஷன்.. திக்குமுக்காடிய படக்குழு

Trending News