தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பல படங்கள் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி நடித்திருப்பார். இதனாலேயே காலப்போக்கில் எம்ஜிஆரை மக்கள் திலகம் எம்ஜிஆர் என அழைத்துள்ளனர்.
அப்போதெல்லாம் எம்ஜிஆர் படம் என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க சென்று விடுவார்களாம் காலப்போக்கில் அதுவே எம்ஜிஆரை அனைவருக்கும் பிடித்துப் போக காரணமானது.
திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பெயர் பெற்ற எம்ஜிஆர். அதன்பிறகு அரசியல் களத்தில் குதித்தார். அப்போது இவர் மக்களுக்கு நல்ல ஆட்சியை செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
எம்ஜிஆர் அரசியல்வாதியாக இருக்கும்போது சட்டசபை கூடுவதற்கு முன்பே என்ன நடக்கும் என்பதை முதலிலேயே கணித்து விடுவாராம். அதாவது 10:30 மணிக்கு சட்டசபை என்றால் 9:30 மணிக்கு அனைத்து வேட்பாளர்கள் வரச்சொல்லி முதலிலேயே அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி விடுவாராம்.
அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சியில் யார் யார் என்னென்ன சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு சொல்லிவிடுவார்.
இதற்கு உளவுத்துறை ஒரு பெரிய காரணமாக இருந்தார்களாம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞருக்கு எம்ஜிஆர் பல உதவிகளை செய்து உள்ளார். கலைஞர் கருணாநிதி வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை கூட எம்ஜிஆர் தான் தீர்த்து வைப்பாராம்.
பிள்ளைகளுக்கு சண்டை வந்தாலும் எம்ஜிஆர் கூப்பிட்டு அவர்களை சமாதானப்படுத்தி விடுவாராம். இத்தனைக்கும் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது பல தொந்தரவுகளை கொடுத்ததுதான் எதிர்க்கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசியல்வாதியாக இவர்கள் இருவருக்கும் போட்டி இருந்தாலும் மற்றபடி நண்பர்களாகவே இருந்துள்ளனர்.