செருப்பு தைப்பவருக்கு அதிர்ச்சி கொடுத்த எம்ஜிஆர்.. நிஜத்திலும் ஹீரோ என நிரூபித்த வாத்தியார்

MGR: அந்த கால சினிமாவை எம்ஜிஆர், சிவாஜி என்றால் இரு பெரும் ஜாம்பவான்கள் தான் ஆட்சி செய்து வந்தனர். இருவரும் தங்களுக்கு என ஒரு ஸ்டைலில் நடித்து வந்த நிலையில் எம்ஜிஆர் அரசியலிலும் களம் இறங்கி தன் முத்திரையை பதித்தார். தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய எளிமை தான். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற சமயத்தில் தன்னை தேடி வந்து மலை போல் குவிந்திருக்கும் கடிதங்களை பார்வையிட்டு இருக்கிறார். அப்போது கைக்கு கிடைத்த சில கடிதங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கோட்டைக்கு சென்று இருக்கிறார்.

Also read: 75 படங்கள் இயக்கி சாதனை படைத்த இயக்குனர்.. ஆலமரம் போல் சிவாஜியை வளர்த்த டைரக்டர்

போகும் வழியில் அதை பிரித்து பார்த்தவருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் அது ஒரு திருமண அழைப்பிதழ். அதில் அந்த பத்திரிகையை அனுப்பியவருடைய பெயரும் இருந்திருக்கிறது. ஆனால் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்கவில்லை, அழைப்பு மட்டுமே வந்திருக்கிறது.

இதனால் ஆச்சரியப்பட்டு போன எம்ஜிஆர் தனக்கு நெருங்கிய ஒரு காவல் அதிகாரியை ரகசியமாக அது யார் என்று பார்த்து வர சொல்லி இருக்கிறார். விசாரித்ததில் அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்றும் எம்ஜிஆரின் தீவிர ரசிகன் மற்றும் தொண்டன் என்றும் கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த செருப்பு தைக்கும் இடத்தில் வைத்திருக்கும் பெட்டியில் எம்ஜிஆரின் போட்டோ தவிர வேறு எந்த சாமி படங்களும் இல்லை என தெரிய வந்திருக்கிறது.

Also read: எம்ஜிஆர், சிவாஜி சினிமாவில் புரட்டி எடுத்த நிஜமான ஹீரோ.. நம்பியாருக்கு முன்னரே மிரட்டிய வில்லத்தனம்

இப்படி கஷ்டத்தில் இருக்கும் தொண்டன் தன் மகளுடைய திருமணத்திற்கு உதவி என்று கேட்காமல் அழைப்பு மட்டும் விடுத்திருப்பது எம்ஜிஆருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை தொடர்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டு திருமண நாள் அன்று அந்த இடத்தில் பல போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இதை பலரும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எம்ஜிஆரின் வாகனம் அங்கு வந்திருக்கிறது.

9 மணிக்கு திருமணம் என்ற நிலையில் சரியாக தாலி கட்டும் சமயத்தில் அவர் வந்து இறங்கி இருக்கிறார். இதனால் அந்த தொண்டன் பேசுவதற்கு கூட வார்த்தை வராமல் கண்ணீருடன் நின்றாராம். அதை தொடர்ந்து எம்ஜிஆர் திருமணம் முடியும் வரை இருந்து காலை உணவையும் முடித்துக் கொண்டு புறப்பட்டாராம். அந்த வகையில் எம்ஜிஆர் படத்தில் மட்டும் ஹீரோ கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் அவர் வித்தியாசமானவர் தான் என்பதை இந்த சம்பவம் தெரியப்படுத்தி இருக்கிறது.

Also read: எம்ஜிஆரை பார்த்து பதுங்கிய சிவாஜி.. பூரித்துப்போன மக்கள் திலகம்