ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல் வரிசையில் முட்டி மோதிய அஜித்- விஜய்.. அதல பாதாளத்திற்கு சென்ற 4வது தலைமுறை

Tamil Mass Heroes: கோலிவுட்டை எம்ஜிஆர், சிவாஜி ஆட்டிப்படைத்த காலம் போய் அடுத்ததாக ரஜினி, கமல் இருவரும் மாஸ் ஹீரோவாக 80, 90களில் ரவுண்டு கட்டினார்கள். இவர்களுடைய படங்களை எல்லாம் ரசிகர்கள் வெறித்தனமாக சென்று திரையரங்கில் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை இந்த மாஸ் ஹீரோக்கள் எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு பிறகு வந்த அஜித், விஜய் இருவரும் ஒரு வழியா முட்டி மோதி தங்களுடைய இருப்பையும் நிலை நாட்டினார்கள். இப்போதைக்கு தல, தளபதி இருவரும் தான் எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமலுக்கு அப்புறம் மாஸ் ஹீரோவாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறையிலிருந்து இன்னும் யாரும் வரவில்லை என்பதுதான் தமிழ் சினிமாவின் அவல நிலை. ஆனால் சிம்பு, தனுஷ் இருவரும் இண்டஸ்ட்ரிக்குள் வரும்போது மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்கள். ஆனால் அதன் பின் ஒரு சில படங்களிலேயே சரக்கு தீர்ந்து காணாமல் போய்விட்டார்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பின் இரண்டாவது தலைமுறை மாஸ் ஹீரோவாக சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும் உதித்தனர். அவர்களுக்கு பின் மூன்றாவது தலைமுறை மாஸ் ஹீரோக்களாக தல, தளபதி இருவரும் நின்னு விளையாடுகிறார்கள். அதிலும் இன்று ரிலீசாகி இருக்கும் விஜய்யின் லியோ படத்தை ரசிகர்கள் தங்கள் வீட்டு விசேஷம் போலவே ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார்கள்.

இந்த பெருமை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. ஆனால் அஜித்துக்கும் விஜய்க்கும் பிறகு தமிழ் சினிமாவில் கைநீட்டி காட்டக்கூடிய மாஸ் ஹீரோ யாருமே இல்லை என்பது தான் தமிழ் சினிமாவின் பரிதாப நிலை. தற்போது இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்கள் யாருமே அஜித், விஜய்க்கு பிறகு இவர்கள்தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் தமிழ் சினிமா இருக்கிறது. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திறமைசாலிகளை சரியாக தேர்ந்தெடுத்து வளர்த்து விடாவிட்டால் கோலிவுட் அதல பாதாளத்திற்கு சென்று விடும்.

Trending News