நடிகர் திலகம் என்று நடிகைகளில் பெயர் எடுத்தவர் சாவித்திரி. நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து 4வது மனைவியாக வாழ்ந்து வந்தார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் வாழ்க்கையை எவ்வளவு இன்பமாக வாழ முடியுமோ அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அது ஒரு கருப்பு பக்கங்களாகவே இன்று வரை இருந்து வருகிறது.
போதை பழக்கத்திற்கு அடிமையான சாவித்திரியின் கடைசி காலத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் வாழ்ந்து மாண்டார். அவர் உதவி செய்தவர்களும், உறுதுணையாக இருந்தவர்களும் கடைசி காலத்தில் அவரிடம் பணம் இல்லை என்பதை அறிந்து விலகி விட்டனர்.
சாவித்திரியை திருமணம் செய்த ஜெமினி கணேசன், அவரிடம் மிகுந்த அன்புடன் வாழ்ந்து வந்துள்ளார், ஆனால் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருந்துள்ளனர். இவரை கல்யாணம் ஆனவர் என்று தெரிந்தும் கூட சாவித்திரி தான் முதலில் காதலித்து, தன் விருப்பத்தை சொல்லி கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக இருந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி ஆகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் ஆகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பல உண்மைக்குப் புறம்பான காட்சிகளை வைத்துள்ளனர் என்று சாவித்திரியின் வாரிசுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜெமினி கணேசன் தான் சாவித்திரியை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கியாதாகவும் அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே சாவித்திரிக்கு சினிமா துறையில் பல காதல்கள் இருந்ததாகவும், அவர்களுடன் சாவித்திரி நெருங்கி பழகியதாகவும் கூறுகின்றனர்.
இதனை கேள்விப்பட்ட எம்ஜிஆர், சாவித்திரி கூட பழகியவர்களை போனில் கூப்பிட்டு கண்டித்தார் எனவும். கண்டித்தது மட்டுமல்லாமல் சிலரை பழி வாங்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். அவர் திரையுலகில் சாவித்திரிக்கு ஒரு கார்டியனாக இருந்துள்ளார். எம்ஜிஆர் இறப்புக்கு பின்னர் அந்த உண்மையான அன்பு அப்படியே அழிந்துவிட்டது.