MGR: இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாகி விட்டாலே அந்த ஹீரோக்கள் கொடுக்கும் பந்தாவும், அல்டாப்பும் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது. எங்கு போனாலும் தன்னோடு சேர்த்து ஒரு 10 பேரை கூட்டிக் கொண்டுதான் செல்கிறார்கள். இப்படி அவர்களுக்கு, அவர்களே பில்டப் கொடுத்து தங்களை ஒரு பெரிய ஆள் போல் மீடியா முன்பும், பொதுமக்கள் முன்பும் காட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களுடைய பங்குக்கு பவுன்சர்களை பாதுகாப்பு பணிகளுக்காக வைத்திருந்தாலும், இந்த ஹீரோக்கள் அவர்களுடன் ஒரு 10 பேர் என இருக்கும் கூட்டத்தை விட இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது.
Also Read:மாமன்னனுக்கு முன்னரே வடிவேலு சம்பவம் செய்த 5 படங்கள்.. நாசரிடம் கருப்பட்டியாக வாங்கிய அடி
இன்றைய காலகட்டத்தில் அனிருத் முதல் அட்லி வரை ஒரு பத்து பவுன்சர்கள் இல்லாமல் வெளியில் வருவதே கிடையாது. இந்த பவுன்சர்களும், பொதுமக்களை இவர்களிடம் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் ஓவர் அலப்பறை செய்து வருகிறார்கள். இது போன்ற பவுன்சர்களை 70களின் காலகட்டத்திலேயே ஒரு ஹீரோ வைத்திருந்திருக்கிறார்.
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என இன்று வரை தமிழக மக்களால் கொண்டாடப்படும் எம் ஜி ஆர் தான் அந்த காலகட்டத்திலேயே பவுன்சர்கள் வைத்திருந்த ஹீரோ. அப்போதெல்லாம் இவர்களுக்கு பவுன்சர்கள் என்ற பெயர் கிடையாது. அடியாட்கள் அல்லது பாதுகாப்பாளர்கள் என்று தான் இவர்களை சொல்லி வந்திருக்கிறார்கள்.
Also Read:கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. உங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என மேடையில் உருகிய அபிராமி
எப்போதும் எம்ஜிஆர் கூடவே இருக்கும் இவர்கள் பொதுமக்கள் எம்ஜிஆரை நெருங்கி வருவதை, தொட்டு பேசுவதை எப்போதுமே தடுத்தது இல்லையாம். இவர்களுடைய மொத்த செலவும் எம்ஜிஆர் இன் சொந்த செலவு தானாம். மேலும் எம்ஜிஆரின் பாதுகாவலர்கள் தான் அவர் வீட்டு அடுப்பாங்கரை வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த பாதுகாவலர்களில் ரொம்பவும் முக்கியமானவர்தான் ஆர் எம் வீரப்பன். இவர் எம்.ஜி.ஆரின் வலதுகரமாகவே இருந்திருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளராக இருந்த இவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்து இருக்கிறார் மக்கள் திலகம். இன்று வரை தமிழ் சினிமாவில் ஆரம் வீரப்பனை பற்றி பேசாத ஆட்கள் இல்லை என்று சொல்லலாம்.
Also Read:கலெக்டராய் அசத்திய 5 ஹீரோயின்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய மதிவதனி