ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

5 ரூபாய் கடனை அடைக்க ஜப்பான் வரை சென்ற எம்ஜிஆர்.. நிம்மதியை தொலைத்து பட்ட பாடு

Mgr: எம்ஜிஆர் அவருடைய எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து தற்போது வரை சாதனை மனிதராக நிலைத்து நிற்கிறார். அப்படிப்பட்ட இவரை ஆரம்பத்தில் ஒரு நடிகராக ஏற்றுக் கொள்வதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருடைய விடாமுயற்சியுடன் நடிப்பை தொடர்ந்து கொடுத்து மக்கள் மனதில் நல்ல ஒரு மனிதர் என்று பெயரெடுத்து அரசியலிலும் ஆட்சி புரிந்து வந்தார்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் ரொம்பவே பணரீதியாக கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அப்பொழுது கையில் கொஞ்சம் கூட பைசா இல்லாமல் தெருத்தெருவாய் அலைந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு உதவி செய்த நபர் நாயர். இவருடைய கஷ்டத்தை பார்த்து எம்ஜிஆருக்கு 5 கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த கஷ்டத்திலும் அவர் கொடுத்த ஐந்து ரூபாய் வாங்க மறுத்திருக்கிறார். அதற்கு காரணம் இதை திருப்பி எப்படி உங்களிடம் என்னால் கொடுக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் எனக்கு இந்த பைசா வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நாயர் உன்னால் முடியும். அப்பொழுது எனக்கு திருப்பிக் கொடு. அதுவரை கடனாக வாங்கிக் கொள் என்று வற்புறுத்தி கொடுத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அவரும் ரொம்பவே கஷ்டத்தில் இருந்ததால் நாயர் கொடுத்த அஞ்சு ரூபாயை வாங்கி இருக்கிறார். அப்பொழுது இந்த பைசாவை பார்த்ததும் உலகத்திலேயே இல்லாத பணம் நம்மிடம் இருக்கிறது என்ற சந்தோசத்தில் பூரித்து போய் இருக்கிறார். இதனை தொடர்ந்து பல மாதங்களாக சினிமாவில் வாய்ப்புக்காக அலைந்து தேடி இவருக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதே மாதிரி இவர் ஆசைப்பட்ட மாதிரி சினிமாவில் பெரிய நடிகராக வளர்ந்து வந்தார். அத்துடன் இவர் வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த நாயரை பார்க்க போயிருக்கிறார். ஆனால் அப்பொழுது அவர் அங்கே இல்லை, பக்கத்தில் விசாரித்த போது ஜப்பானில் ஒரு வீட்டில் வேலை பார்ப்பதற்காக போயிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இதை கேட்டதும் எம்ஜிஆருக்கு அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை என்ற மிகவும் தவித்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றது. அந்த சமயத்தில் படபிடிப்பை முடித்துவிட்டு இந்த நாயர் இருக்கும் இடத்தை தேடி பிடித்து வாங்கிய ஐந்து ரூபாய் உடன் சேர்ந்து 50 ஆயிரம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதன் பின்னரே பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறார்.

Trending News