சினிமாவிலும் அரசியலிலும் சாதித்த வெகு சில நடிகர்களில் எம்ஜிஆர் மிக முக்கியமானவர். நடிகராக வலம் வந்து கொண்டிருந்த போதே அரசியலில் இறங்கி அதிலும் வெற்றிக் கொடியை நாட்டினார்.
நாடகங்களில் நடித்து பின்னர் ஹீரோவானவர் எம்ஜி ராமச்சந்திரன். அதன்பிறகு எம்ஜிஆரின் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்பர்-1 நடிகராக மாறி பாக்ஸ் ஆபீஸில் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அப்பேர்ப்பட்ட எம்ஜிஆரை ஒரே ஒரு நடிகையை மிரள வைத்துள்ளார் என்றால் ஆச்சரியம்தானே. அவர் வேறு யாரும் இல்லை. எம்ஜிஆரின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஜானகி தான்.
ஜானகியின் நடிப்பை பார்த்து எம்ஜிஆர் மிரண்டு போனாராம். இதுவரை இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை எனும் அளவுக்கு ஜானகி மீது எம்ஜிஆருக்கு தனி மரியாதை ஏற்பட்டதாம். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட எம்ஜிஆர் பின்னர் அவர் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
முதன்முதலில் ஜானகியை பார்த்த போது தன்னுடைய முதல் மனைவி போவே அவர் தோற்றமளித்தாராம். அதுவே எம்ஜிஆருக்கு ஜானகி மீது ஈர்ப்பை ஏற்படுத்தியதாம். அப்படியே அச்சு அசல் தன்னுடைய முதல் மனைவி தங்கமணி போலவே இருந்தாராம் ஜானகி.
ஜெயலலிதாவின் அழகு வேண்டுமானால் எம்ஜிஆரை கவர்ந்திருக்கலாம், ஆனால் அவரது நடிப்பு எம் ஜி ஆரை கவர்ந்ததா? என்றால் கேள்விக்குறிதான். நடிப்பாலும் அழகாலும் எம்ஜிஆரை கவர்ந்த ஒரே பெண்மணி என்றால் அது ஜானகிதான் என தற்போது வரை கூறி வருகின்றனர்.