தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டிலும் எம்ஜிஆர் செய்த சாதனைகள் பற்றி சொல்லி மாளாது. அந்த அளவுக்கு அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பேர்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டது அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான்.
இப்போதுள்ள காலகட்டத்தில் பிறந்த குழந்தை கூட ஹீரோவாக நடித்து விடுகிறது. ஆனால் 40 வயதுக்கு பின் தான் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார் எம்ஜிஆர். சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் முத்திரை பதித்தார்.
அதன் பிறகு எம்ஜிஆர் வழியில் நடிகை ஜெயலலிதா அரசியல் ஆட்டத்தை தொடர்ந்தார். இப்படி சினிமாவிலும் அரசியலிலும் சாணக்கியராக வலம் வந்த எம்ஜிஆர் ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் எழுதப்பட்டது.
அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் காலகட்டங்களில் ஹீரோவாக நடித்த ஒருவரை எம்ஜிஆருக்கு சுத்தமாக பிடிக்காதாம். அதற்கு காரணம் தன்னுடைய படங்களில் ஜெயலலிதாவுடன் அதிக நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பாராம் அந்த நடிகர்.
அவர் வேறு யாருமல்ல. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் தான். ஜெயலலிதா மற்ற நடிகர்களைக் காட்டிலும் ஜெய்சங்கர் படங்களில் அதிக அளவு காதல் காட்சிகளை நடிப்பாராம். இதனால் ஜெய்சங்கரை எம் ஜி ஆருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
முடிந்தவரை ஜெய்சங்கர் படங்களில் ஜெயலலிதாவை நடிக்க வைக்காமல் பார்த்துக் கொள்வதே எம்ஜிஆருக்கு பெரிய வேலையாக இருந்ததாம். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.